விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி இணைந்து நடித்த ‘காந்தி டாக்ஸ்’ படம் ரிலீஸ்..

Web Ads

விஜய்சேதுபதி வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் கொண்டவர். இவருக்கு மலையாளம், தெலுங்கு, இந்தி என பிற மொழிகளிலும் தனி ரசிகர் கூட்டம் உண்டு. இவர் தற்போது, இந்தியில் ‘காந்தி டாக்ஸ்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் அரவிந்த்சாமி, அதிதி ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் பேசும் படம் போன்று இந்த படத்தை மவுன படமாக எடுத்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்டுள்ளார். அதன்படி, இப்படத்தின் டீசரை வெளியிட்டு, படம் வருகிற 30-ந்தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார்.

the release date of gandhi talks movie has been announced
the release date of gandhi talks movie has been announced