ஜெயிலர் 2 இரண்டாவது நாள் வசூல் தெரியுமா?

Web Ads

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. மோகன்லால், சிவராஜ்குமார், ஹிருத்திக் ரோஷன், விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு எனப் பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் 1,200 திரையரங்குகள் உள்பட உலகம் முழுவதும் சுமார் 14,000 திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளது. படம் வெளியானது முதலே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. பல்வேறு திரையரங்குகளிலும் ரசிகர்களின் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.

வெளியான முதல் நாளிலேயே உலகளவில் ரூ.125 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்படும் ‘ஜெயிலர் 2’, இரண்டு நாட்களில் ரூ.210 கோடியைக் கடந்து வசூல் சாதனை படைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Web Ad 2

தொடர்ந்து விடுமுறை நாட்கள் வருவதால், படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, வார இறுதி நாட்களுடன் ஆயுத பூஜை விடுமுறையும் இணைவதால், திரையரங்குகளில் ரசிகர்களின் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

ஏற்கெனவே ‘ஜெயிலர்’ முதல் பாகம் உலகளவில் ரூ.620 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்படும் நிலையில், அதன் இரண்டாம் பாகம் அந்த வசூல் சாதனையை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.