தன் மகளின் காதல் மற்றும் கர்ப்பம் குறித்து, கே.பாக்யராஜ் உணர்வுபூர்வமான தகவல்..
தன் மகள் சரண்யாவின் காதல் திருமணம் மற்றும் பிறந்த பேரன் பற்றி நடிகரும் இயக்குனருமான கே.பாக்யராஜ் உணர்ச்சிகரமான தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து பார்ப்போம்..
தமிழ் சினிமாவில் உள்ள நட்சத்திர ஜோடிகளுக்கு முன் மாதிரியாக, கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக, ஒற்றுமையாக வலம் வரும் தம்பதியர் கே.பாக்யராஜ்- பூர்ணிமா. இவர்களுக்கு சாந்தனு என்கிற மகனும் சரண்யா என்கிற மகளும் உள்ளனர்.
சரண்யா, ‘பாரிஜாதம்’ என்கிற ஒரே ஒரு படத்தில் மட்டுமே ஹீரோயினாக நடித்தார். அதன் பின்னர் அவர் எதிர்பார்க்கும் படியான கதாபாத்திரம் அமையாததால், நடிப்பில் இருந்து விலகி, தற்போது தன்னுடைய அம்மா துவங்கிய பேஷன் டிசைனிங் நிறுவனத்தை கவனித்து வருகிறார்.
மேலும், இதுவரை தன்னுடைய கணவர் யார் என்பதை வெளிப்படுத்தாத சரண்யா, தனக்கு ஒரு ஆண் குழந்தை அண்மையில் பிறந்த தகவலை கூறி அதிர்ச்சி கொடுத்தார். எனவே சரண்யாவின் கணவர் யார்? அவர் யாரை திருமணம் செய்து கொண்டார்? அவருடைய திருமணம் ரகசியமாக நடந்ததா? பாக்யராஜ் மற்றும் – பூர்ணா தம்பதி ஏன் இதனை வெளிப்படுத்தவில்லை? என பல்வேறு கேள்விகள் வலைதளத்தில் சுற்றிக் கொண்டிருந்தது.
இதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக, பாக்யராஜ் தற்போது கூறியுள்ளதாவது, ‘என் பெண்ணோட காதல என்னால ஜீரணிக்க முடியல, இந்த ஜாதி, மதம், பணம், எல்லாத்தையும் தாண்டி வேற ஒரு காரணம் இருந்தது.
என் பொண்ணு தனியாக போனாள். நாங்களும் கோபத்தில் அப்படியே இருந்தோம். ஆனால், அவர் கர்ப்பம் ஆகிட்டான்னு சொன்னதும், மனசு தாங்க முடியல. அப்புறம் பூர்ணிமா தான் கூட போனாங்க. பையன் பிறந்து இருக்கான்னு சொன்னவுடனே, நான் ஓடிப் போய் ஹாஸ்பிடல்ல பார்த்தேன். நான் தான் கையில முதல்ல அவனை வாங்குனேன்.
இப்போ அவன பாக்காம என்னால இருக்க முடியாது. அவனுக்கும் நான் இல்லாம இருக்க முடியாது. என உணர்வுப்பூர்வமான தகவலை பகிர்ந்துள்ளார்.
அதேநேரம், இவரின் கணவர் பற்றி தகவல் ஏதும் கூறவில்லை.