மஞ்சரியின் கேப்டன்சி பறிக்கப்படுமா?..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!
இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன் முடிந்து எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த வாரம் ரியா தியாகராஜன் எலிமினேஷன் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று வெளியான முதல் ப்ரோமோவில் ராணவ் பெண் போட்டியாளர்களின் பர்மிஷன் இல்லாமல் எகிறி குதித்து விடுகிறார். இதனால் மஞ்சரி யாரையும் கேட்காமல் இப்படி செய்தால் எப்படி என்று கேட்க அவர் விஷாலை வைத்துப் பேசுகிறார்.
இரண்டாவது ப்ரோமோவில் மஞ்சரி மற்றும் அருண் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் மஞ்சரியின் கேப்டன்ஷியில் பாரபட்சம் இருந்தால் கிரீன் பேட்ச் எடுக்கலாம் என்று சொல்லி மஞ்சரிடம் மூன்று கிரீன் பேட்ச் கொடுக்கின்றனர். அதில் முதலாவதாக முத்துக்குமரன் ராணவ் பிரச்சனையை சொல்லி ஒரு கிரீன் பேட்ச் எடுக்கிறார். பிறகு சாச்சனா ஒரு கிரீன் பேட்ச்சை எடுக்கிறார். மூன்று கிரீன் பேட்ச் எடுத்துவிட்டால் மஞ்சரியின் கேப்டன்சி பறிக்கப்படும் என்று பிக் பாஸ் சொல்லியுள்ளதால் மஞ்சரி கண்கலங்குகிறார்.
இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram