ரூ.600 கோடி பட்ஜெட்டில், சூர்யா நடிக்கும் அடுத்த படம் கர்ணா..?
ரிஸ்க் எடுக்கிறது எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி என்பது போல, சூர்யா நடிப்பில் மீண்டும் ஒரு வரலாற்றுப் படம் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றிக் காண்போம்..
நடிகர் சூர்யா, கடந்த 2 ஆண்டுகளாக கடினமாக உழைத்து வெளிவந்த படம் கங்குவா, இப்படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆகி கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
சூர்யாவின் திரைவாழ்வில் மிகப்பெரிய தோல்விப் படமாக கங்குவா இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கங்குவா படத்தின் தோல்விக்கு பின்னர், நடிகர் சூர்யா நடிப்பில் சூர்யா 44 திரைப்படம் உருவாகி இருக்கிறது.
சூர்யா 44 திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். படத்தில், சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது. இதையடுத்து சூர்யாவின் 45-வது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ளார்.
இப்படத்தின் ஷூட்டிங்கும் இன்னும் ஒரிரு மாதத்தில் தொடங்க உள்ளது. இப்படத்தை போல் நடிகர் சூர்யா மேலும் ஒரு பான் இந்தியா படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
அது, கங்குவா படத்தை போல் வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக உருவாக உள்ளது. அப்படத்தின் பெயர் கர்ணா. அப்படத்தை ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்க உள்ளார். இப்படத்தின் பட்ஜெட் மட்டும் சுமார் 600 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
இப்படத்தின் மூலம் நடிகர் சூர்யா பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அவர் நடிக்கும் முதல் நேரடி இந்தி படம் இதுவாகும். கங்குவா படம் செம அடி வாங்கிய நிலையில், அதே பாணியில் நடிக்க சூர்யா எடுத்துள்ள இந்த ரிஸ்க் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஆனால், இது குறித்து நடிகர் சூர்யாவிடமிருந்து அதிகாரப்பூர்வமான தகவல் வரவில்லை.