Web Ads

பைசன் படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்,எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

பைசன் படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

bison movie shooting wrapped
bison movie shooting wrapped

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமகமானவர் மாரி செல்வராஜ். அதனைத் தொடர்ந்து கர்ணன், மாமன்னன் போன்ற வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவரது இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலிலும் சாதனை படைத்திருந்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது துருவ் விக்ரம் வைத்து பைசன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தற்போது இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைய உள்ளதாகவும் மேலும் கோடை விடுமுறையை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இது மட்டுமில்லாமல் கபடியை மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

bison movie shooting wrapped
bison movie shooting wrapped