ஜெயிலர் 2 படத்தின் வில்லன் யார் தெரியுமா? மிரட்டலான அப்டேட் இதோ..!
ஜெயிலர் 2 படத்தின் வில்லன் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் வெளியாக இந்த திரைப்படத்தில் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக்கப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. தற்போது இந்த படத்தின் வில்லன் ஆக நடிக்கப் போவது யார் என்று தகவலும் வெளியாகி உள்ளது.
அதாவது ஜெய்லர் 2 படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக என்ட்ரி கொடுப்பார் என்று சொல்லப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை பொறுத்து இருந்து பார்க்கலாம்.
