நடிகர் வைபவ் நடிக்கும் ‘மாறு வேஷம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Web Ads

நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகி வரும் மர்டர் மிஸ்ட்ரி த்ரில்லர் திரைப்படமான ‘மாறுவேஷம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளம் கொண்ட மர்டர் மிஸ்ட்ரி ஜானரில் உருவாகும் இந்தப் படத்தை ஒனிரோமான்சி பிக்சர்ஸ் நிறுவனம், மங்கி மேன் கம்பெனியுடன் இணைந்து தயாரித்துள்ளது. விஜய் ஆனந்த் மற்றும் நடிகர் வைபவ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஸ்ரீனி எழுதி இயக்கியுள்ளார்.

குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய துப்பறியும் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் படத்தில், சவாலான வழக்குகளைத் தீர்க்க ஆவலாக இருக்கும் காவல்துறை அதிகாரி திலக் கதாபாத்திரத்தில் வைபவ் நடித்துள்ளார். தனது திறமையை நிரூபிக்க ஒரு பெரிய வழக்குக்காக காத்திருக்கும் அவருக்கு, பல மர்மங்கள், அதிர்ச்சி திருப்பங்கள் மற்றும் மறைக்கப்பட்ட உண்மைகள் நிறைந்த ஒரு கொலை வழக்கு கிடைக்கிறது. அந்த விசாரணையின் பயணம்தான் ‘மாறுவேஷம்’.

படம் குறித்து இயக்குநர் ஸ்ரீனி கூறுகையில், “‘மாறுவேஷம்’ என்ற தலைப்பே படத்தின் மர்மத்தை வெளிப்படுத்துகிறது. யார் எதை மறைக்கிறார்கள்? ஏன் ஒரு கதாபாத்திரம் மாறுவேஷம் எடுக்கிறது? அது உயிர் பிழைப்பதற்கான போராட்டமா, பழிவாங்கலா, காதலா அல்லது கடந்த காலத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியா? இந்த கேள்விகளுக்கான பதில்களே படத்தின் மையம். முகம் மாறலாம்… ஆனால் கடந்த காலத்திலிருந்து தப்பிக்க முடியுமா? என்பதே இந்தக் கதையின் முக்கியக் கரு” என்றார்.

Web Ad 2

இந்தப் படத்தில் வியானா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ராம்கி, முனிஷ்காந்த், விவேக் பிரசன்னா, லிவிங்ஸ்டன், ஜார்ஜ் மரியன், ஜார்ஜ் விஜய், இந்துமதி, மு. ராமசாமி மற்றும் செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழு:

எழுத்து & இயக்கம்: ஸ்ரீனி
தயாரிப்பு: விஜய் ஆனந்த், வைபவ்
ஒளிப்பதிவு: பாலாஜி கே. ராஜா
இசை: ராஜ்குமார் அமல்
படத்தொகுப்பு: என்.பி. ஸ்ரீகாந்த்
கலை இயக்கம்: மணிகண்டன் சீனிவாசன்
கூடுதல் திரைக்கதை: எஸ். இசையமுதன்

மர்மம், சஸ்பென்ஸ் மற்றும் கணிக்க முடியாத திருப்பங்களால் நிரம்பிய ‘மாறுவேஷம்’, த்ரில்லர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்கனவே எகிற வைத்துள்ளது.