ஜி.டி.என் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜி.டி.என்.’ (GTN) திரைப்படம், அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், தற்போது வெளியாகும் முன்பே புதிய சாதனையைப் படைத்துள்ளது.
சமீபத்தில் கோயம்புத்தூரில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெற்ற பிரம்மாண்ட டிரெய்லர் வெளியீட்டு விழாவும், டிரெய்லருக்கு கிடைத்த அமோக வரவேற்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியது.
இந்நிலையில், IMDb வெளியிட்டுள்ள “Most Anticipated New Indian Movies and Shows” பட்டியலில், 11.1% ரியல்டைம் பிரபலத்தன்மை மதிப்பெண்ணுடன் ‘ஜி.டி.என்.’ மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த அங்கீகாரம், இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களின் வரிசையில் ‘ஜி.டி.என்.’ படத்தை இணைத்துள்ளது. குறிப்பாக, “இந்தியாவின் எடிசன்” என்று போற்றப்படும் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் காண ரசிகர்கள் நாடு முழுவதும் ஆவலுடன் காத்திருப்பதையும் இது பிரதிபலிக்கிறது.
படத்தின் வலுவான கதைக்களம், வரலாற்றுப் பின்னணி, பிரம்மாண்ட தயாரிப்பு தரம் மற்றும் ஜி.டி. நாயுடுவாக ஆர். மாதவன் மேற்கொண்டுள்ள தோற்ற மாற்றம் ஆகியவை ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.

‘ராக்கெட்ரி’ படத்தின் தயாரிப்பாளர்களிடமிருந்து உருவாகும் இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ளார். வர்கீஸ் மூலன், விஜய் மூலன், சரிதா மாதவன் மற்றும் ஆர். மாதவன் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில் மாதவனுடன் இணைந்து சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், வினய் ராய், தம்பி ராமையா, நந்தலால், டிஜே அருணாசலம், ஷீலா, கருணாகரன், அதிதி பாலன், மோகன் ராமன், கனிகா, ரமேஷ் திலக், கார்ல் ஆண்ட்ரூ ஹார்டே மற்றும் ரிச்சர்ட் பக்தி கிளைய்ன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக் குழு
எழுத்து & இயக்கம்: கிருஷ்ணகுமார் ராமகுமார்
திரைக்கதை: கிருஷ்ணகுமார் ராமகுமார், ஆர். மாதவன்
ஒளிப்பதிவு & கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: அரவிந்த் கமலநாதன்
இசை: கோவிந்த் வசந்தா
படத்தொகுப்பு: பிஜித் பாலா
வசனம்: முகில்
கலை வடிவமைப்பு: சிரில் குருவில்லா
ஆடை வடிவமைப்பு: ஜிஷாத் ஷம்சுதீன்
ஒலி வடிவமைப்பு: சித்தார்த் சதாசிவ்
மேக்கப்: ரஞ்சித் அம்பாடி
நிர்வாகத் தயாரிப்பாளர்: முரளிதரன்
தயாரிப்பு மேலாளர்: ஹக்கிம் சுலைமான்
ஜி.டி. நாயுடுவின் புதுமை, விடாமுயற்சி, தேசப்பற்று மற்றும் தொலைநோக்கு சிந்தனையை கொண்டாடும் ‘ஜி.டி.என்.’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.