அனிருத்துடன் இணைந்த வேடன்

Web Ads

இசைப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளதாக பாடகர் வேடன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். முதல் முறையாக இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் உடன் இணைந்து பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

வரவிருக்கும் ‘DC’ திரைப்படத்திற்காக சமீபத்தில் சென்னை நகரில் பாடல் பதிவு நடைபெற்றதாகவும், அந்த அனுபவம் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக அமைந்ததாகவும் வேடன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “முதல் முறையாக ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் சாருடன் இணைந்து ஒரு பாடல் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கோடிக்கணக்கான மக்களை தனது இசையால் ஊக்குவித்த ஒருவருடன் பணியாற்றியது எனக்கு மிகப்பெரிய கனவு நனவான தருணம்” என்று தெரிவித்துள்ளார்.

Web Ad 2

மேலும், “ஒவ்வொரு கூட்டணியும் புதிய அனுபவத்தை கற்றுக்கொடுக்கிறது. அதுபோல இந்த ஒத்துழைப்பு எனக்கு மிகவும் சிறப்பானது. ஸ்டுடியோவில் அனிருத் சாரின் எனர்ஜி, அர்ப்பணிப்பு மற்றும் கிரியேட்டிவிட்டி என்னை மிகவும் ஈர்த்தது. இந்த பாடல் பதிவு என்றென்றும் என் மனதில் நிற்கும் நினைவாக இருக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாய்ப்பை வழங்கிய ‘DC’ படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ள வேடன், “நாங்கள் எந்த அளவுக்கு மகிழ்ச்சியுடன் இந்த பாடலை உருவாக்கினோமோ, அதே மகிழ்ச்சியை ரசிகர்களும் உணர்வார்கள் என நம்புகிறேன். இந்த பாடல் வெளியாகும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

வேடன் – அனிருத் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த புதிய பாடல் ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.