Pushpa 2

டெவில்ஸ் மற்றும் ஏஞ்சல்ஸ் டாஸ்கில் தொடரும் பிரச்சனை.. அருண் முத்துக்குமரன் இடையே உருவான வாக்குவாதம்..வெளியான மூன்றாவது ப்ரோமோ..!

இன்றைய மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

biggboss tamil 8 day 59 promo 3 update
biggboss tamil 8 day 59 promo 3 update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் டெவில்ஸ் மற்றும் ஏஞ்சல்ஸ் ஸ்டாக் தொடங்கியுள்ளது.
ஏற்கனவே வெளியான இரண்டாவது போமோவில் ஜாக்லின் தர்ஷிகா மற்றும் சௌந்தர்யா இடையே வாக்குவாதம் அதிகரித்து சண்டை வரை ஆனது.

தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் அருண் மற்றும் முத்துக்குமரனுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. டெவில்ஸ் உலகத்துல ஒருத்தர டார்கெட் பண்ணனும்னா சைக்கிலாஜிக்கலா தான் பண்ணனும் என்று அருண் சொல்லுகிறார். அது யார் பண்ணாங்களோ அவங்கள ஜெயில்ல போடணும் என்று வரும் சொல்ல முத்துக்குமரன் சிரிக்கிறார்.

இதனால் அருண் முத்துக்குமரனை பார்த்து என்னப்பா சிரிப்பு வருதா என்று கேட்கிறார். எப்படி உனக்கு சிரிப்பு வருது முடிஞ்சா ஜெயிலுக்கு அனுப்புங்க எவன் அனுப்புறேன்னு நான் பாக்குறேன் டா என்று அருண் சவால் விடுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.