மனம் வருந்தி பேசிய ராதிகா, ஆறுதல் சொன்ன பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!
மனம் வருந்தி ராதிகா பேச பாக்யா ஆறுதல் சொல்லியுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி ராதிகாவை உள்ளே செல்ல அனுமதிக்காததால் எழில் மற்றும் பாக்யா இருவரும் ஈஸ்வரியை சாப்பிட சொல்லுமாறு வற்புறுத்தி பேசிக்கொண்டனர் முதலில் மறுத்த ஈஸ்வரி பிறவு நான் போயிட்டா இவ உள்ள போயிடுவா என்று சொல்ல அதுதான் இனியா இருக்கா உள்ள விடமாட்டா நீங்க வந்து சாப்பிடுங்க என்று சொல்லுகிறார்.ஒரு கட்டத்திற்கு மேல் ஈஸ்வரி சாப்பிட கிளம்பியவுடன் பாக்யா ராதிகாவை பார்க்க போக சொல்லுகிறார் உடனே ராதிகா என் புருஷனை பார்ப்பதற்கு இவ்வளவு தடை மீறி நான் போகணுமா என்று சொல்ல பாக்யா நான் நிறைய பேருக்கு விளக்கம் கொடுத்துட்டேன் உங்ககிட்டயும் என்னால பேசற மாதிரி வச்சுக்காதீங்க என்று சொல்லிவிட்டு போக சொல்லுகிறார்.பிறகு இனியாவிடம் பாட்டிகிட்ட இதெல்லாம் சொல்லக்கூடாது என்று சொல்லிவிடுகிறார்.
இனியாவும் சரி என சொல்ல ராதிகா கோபியை பார்த்து கண்கலங்கி கையை பிடிக்கிறார். ஆனால் கோபி கண்ணுக்கு பாக்கியாவாக தெரிய அவர் ரொம்ப நன்றி பாக்யா உனக்கு எவ்வளவு கெடுதல் செஞ்சோம் நீ என்ன காப்பாற்றி இருக்க நீ மட்டும் அங்க வரலனா நான் செத்துப் போய் இருப்பேன் என்றெல்லாம் பேச ராதிகா அதிர்ச்சி ஆகி நிற்கிறார்.
உடனே ஈஸ்வரி உள்ளே வர ராதிகாவை இழுத்துக் கொண்டு வெளியே வந்து விடுகிறார் உனக்கு எத்தனை வாட்டி சொன்னாலும் புரியாதா அவனே இப்பதான் செத்துப் பிழைத்து இருக்கான் அவன போய் எதுக்கு பண்ணி பாத்துட்டு இருக்க அவனை வேண்டான்னு சொன்னவ தானே நீ என்று எல்லாம் பேசுகிறார் உடனே இவள் அனுப்ப தான் என்ன போய் சாப்பிட சொன்னீங்களா என்று கோபப்பட்டு ராதிகாவை திட்டுகிறார். உடனே செழியன் அங்கு வர என்னாச்சு பாட்டி என்று கேட்கிறார் இவள வரவேணான்னு சொன்னா எதுக்கு வரா என்று சொல்ல செழியன் இங்கு எதுக்கு வரீங்க கொஞ்ச நாளைக்கு கம்முனு தான் இருங்க சரி ஆனதுக்கப்புறம் பேசிக்கலாம் என்று பேச எழில் ராதிகாவிற்கு ஆதரவாக பேசுகிறார் ஆனால் ராதிகா வீடு எழில் நான் கிளம்புறேன் என்று சொல்லிவிடுகிறார்.
மறுபக்கம் பாக்கியா கேப் வராமல் வெயிட் பண்ணிக்கொண்டு ஃபோன் பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரம் பார்த்து ராதிகா வெளியில் வந்து நிற்க கோபியை பார்த்தீர்களா என்று கேட்கிறார் பார்த்தேன் ஆனா அவரு உங்களை தான் கேட்டார் என்று சொல்ல என்ன சொல்றீங்க என்று கேட்கிறார் அவர் என்ன நீங்களும் நினைச்சு காப்பாத்துனதுக்கு நன்றி சொன்னார் என்று சொல்ல ஆமா அவருக்கு சரியா நினைவு திரும்பவில்லை என்று சொன்னாங்க அத்தை என்று சொல்லுகிறார். அவர பாக்க அனுமதிச்சதுக்கு நன்றி என்று பாக்யாவிடம் சொல்ல உங்க புருஷன பாக்குறதுக்கு எனக்கு எதுக்கு நன்றி சொல்றீங்க என்று கேட்கிறார் பாக்கியா. இனிமே நான் இங்கே இருக்க மாட்டேன் அவருடைய டிஸ்சார்ஜ் பண்ணி உன் வீட்டுக்கு வந்துருவாரு கவலைப்படாதீங்க என்று சொல்ல ராதிகா சரியென எதுவும் பேசாமல் கிளம்ப பாக்யா அவரை நிற்கவைத்து உங்ககிட்ட தனியா பேசணும் உங்களோட மனநிலை எப்படி இருக்கும்னு எனக்கு தெரியும் என்று கூப்பிடுகிறார்.
நீங்க எந்த கவலையும் மனசுல வச்சுக்காதீங்க என்று சொல்லுகிறார்.இது மட்டும் இல்லாமல் அவரோட பசங்களும் அம்மாவும் அவங்க மேல உயிரையே வச்சிருக்காங்க அந்தக் காரணத்துக்காக தான் அவங்களால அதை இன்னும் ஏத்துக்க முடியல கொஞ்சம் பொறுத்துக்கோங்க எல்லாமே சரியாயிடும் என்று பாக்யா ராதிகாவிற்கு ஆறுதல் சொல்ல உட்கார்ந்து பேசலாமா என்று ராதிகா கூப்பிடுகிறார் பிறகு இருவரும் உட்கார்ந்து பேச பாக்யாவிடம் ராதிகா இரண்டு மூணு நாளாவே எங்க வீட்ல பிரச்சனை அதிகமாயிட்டு இருந்தது அன்னைக்கு நைட்டு ரொம்ப அதிகமாயி அவர் வீட்டை விட்டு வெளியே போயிட்டாரு. எப்பவுமே வீட்டை விட்டு வெளியே போயிட்டு போன் பண்ணா குடிச்சிட்டு சண்டை போட தான் போன் பண்ணுவாரு அந்த காரணத்துக்காக தான் நான் போன் எடுக்கல ஆனா ஒருத்தர் உயிர் போற நிலை இருக்கும்போது போன் எடுக்காத அளவுக்கு நான் ஒன்னும் கொலைகாரி கிடையாது என்றெல்லாம் பேச பாக்யா எனக்கு தெரியும் நீங்க அப்படி பண்ணி இருக்க மாட்டீங்க என அது உங்களோட சந்தர்ப்பம் சூழ்நிலை அதுக்காக ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்லுகிறார் இப்பதான் அவருக்கு ஏதும் ஆகல இல்ல விடுங்க என்று சொல்ல இருந்தாலும் எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு என்று ராதிகா சொல்லுகிறார்.
நான் சந்தோஷமாகவே இல்ல பாக்யா,கோபிய கல்யாணம் பண்ணி இருக்கக்கூடாது என்று வருத்தப்பட்டு பாக்கியாவின் மீது சாய்ந்து கண்கலங்குகிறார். கோபி ரிஸ்சார்ஜ் ஆகி உங்க வீட்டுக்கு வந்துருவாரு நீங்க எல்லாம் சரியானதுக்கப்புறம் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசுங்க எல்லா பிரச்சனையும் சரியாயிடும் என்று சொல்ல ராதிகா இவ்வளவு நேரம் என் பொழப்புல கேட்டதுக்கு ரொம்ப நன்றி என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
ஈஸ்வரி வீட்டுக்கு வர என்ன சொல்லுகிறார்? அதற்கு வீட்டில் இருப்பவர்களின் பதில் என்ன. என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

