கஞ்சா வியாபாரிகளிடம் தொடர்பு.. கைது செய்யப்பட்ட மன்சூர் அலிகான் மகன்.!
கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு இருப்பதாக சொல்லி மன்சூர் அலிகான் மகனை கைது செய்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வருபவர் மன்சூர் அலிகான். இவர் வில்லன்,துணை கதாபாத்திரம் என பல படங்களில் நடித்து பிரபலமானார்.
இவருக்கு அலிக்கான் துக்ளக் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் ஏற்கனவே சில நாட்களுக்கு முன் கஞ்சா வியாபாரிகளோடு தொடர்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது விசாரணை முடிந்த கையோடு மன்சூர் அலிகான் மகன் அலிக்கான் துக்ளக் மற்றும் நான்கு பேரை திருமங்கலம் போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே கல்லூரி மாணவர்கள் 10 பேரை கஞ்சா வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி பேசும் பொருளாக மாறி உள்ளது.