நாமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்கள் இவர்கள்தான்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ..!
இந்த வாரம் நாமினேஷனில் போட்டியாளர்கள் யார் யார் என்று தெரியவந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
நேற்று நடந்த எபிசோடில் தர்ஷா எலிமினேஷன் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான நாமினேசன் தொடங்கியுள்ளது.
அதில் ஆண் போட்டியாளர்கள் பெண்களையும் பெண் போட்டியாளர் ஆண்களையும் நாமினேஷன் செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் சொல்லுகிறார். உடனே ஆண் போட்டியாளர்கள் ஜாக்குலின் மற்றும் சுனிதாவை டார்கெட் செய்ய பெண் போட்டியாளர்கள் ஜெஃப்ரி மற்றும் ரஞ்சித்தை நாமினேட் செய்கின்றனர்.
அதனை தொடர்ந்து வெளியான ப்ரோமோவில் அந்த போட்டியாளர்கள் யார் யார் என்று வெளியாகி உள்ளது. ஜாக்லின், அருண் பிரசாத், சத்யா, ரஞ்சித், பவித்ரா, ஜெஃப்ரி ,சுனிதா ஆகியோருடன் நேரடியாக நாமினேட் செய்யப்பட்ட ஹன்சிகா மற்றும் தீபக்கும் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடிக்கின்றனர்.
இவர்களில் யார் வெளியேறப் போகிறார் என்று இந்த வார இறுதியில் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram