நிஜமாகிய எழிலின் கனவு, சந்தோஷத்தில் பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!
எழில் கனவு நிஜமாக பாக்கியாவும், அமிர்தாவும் சந்தோஷப்பட்டு உள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா ரெஸ்டாரண்டில் இருக்க பழனிச்சாமி சாப்பிட வருகிறார். பாக்கியா ஒக்காந்து பேசிக் கொண்டிருக்க டிபன் எப்படி இருக்கு சார் என்று கேட்கிறார். சூப்பரா இருக்கு மேடம் என்று சொல்ல காலையிலிருந்து கஸ்டமர் குறைஞ்சிட்டாங்க போலயே என்று கேட்கிறார் ஆமாம் சார் மூன்று பேர் தான் வந்திருக்காங்க என்று சொல்லுகிறார். முதல்ல இப்படி தானே இருந்தது ஆனா பிக்கப் பண்ணிட்டீங்க இல்ல அது மாதிரி பண்ணிடுவீங்க என்று சொல்ல ஆனால் முன்ன வந்து இது மாதிரியான கெட்ட பேர் கிடையாது ஆனா இப்ப எப்படி இதிலிருந்து வெளியே வர போறேன்னு தெரியல என்று சொல்ல கண்டிப்பா மத்தவங்களுக்கு வேணா அது கஷ்டமா இருக்கலாம் உங்களுக்கு ரொம்ப ஈஸி என்று சொல்லிவிட்டு அவருக்கு ஒரு போன் வருகிறது உடனே நான் துபாய் போக வேண்டும் வர இரண்டு மாதம் ஆகும் என்று சொல்ல என்ன சார் ஆச்சு என்று கேட்கிறார் பிசினஸ் விஷயமா போறேன் என்று சொல்ல பாக்யா முகத்தில் ஒரு சிறிய வருத்தம் தெரிந்தாலும் சரி போயிட்டு வாங்க சார் என்று சொல்லி அனுப்பி வைக்கிறார். பிறகு செல்வி சார் போனது உனக்கு கஷ்டமா இருக்கா என்று கேட்க ஏதாவது ஒன்னுனா போய் சொல்றதுக்கு ஒரு ஆள் இருந்தாங்க ஆனா இல்ல இல்ல அதுக்காக அவர் வேலையும் நம்ப போக சொல்லாம இருக்க முடியாது போயிட்டு வரட்டும் என்று சொல்லுகிறார்.
கோபி சொன்ன ப்ரொடியூசரை எழில் வந்து பார்க்க அவர் கதையை சொல்லுகிறார். கதை சொல்லிய பிறகு உங்க மேல எதுக்கு தடை போட்டு இருந்தாங்க இதுக்கு முன்னாடி சொன்ன கதை ஏன் உங்களால பண்ண முடியல என்று கேள்வி கேட்க இருக்கு முன்னாடி ஒரு ப்ரொடியூசர்கிட்ட பாக்கும்போது சில கரப்ஷன் சொன்னாரு ஆனா அத நான் பண்ணிட்டேன் அதை எடுத்துக்கிட்டு போய் சரியான டைம்ல என்னால கொடுக்க முடியல ஃபேமிலி பிராப்ளம் ஆயிடுச்சு என்று சொல்லுகிறார். உடனே கொஞ்ச நேரம் யோசித்து அந்த புரொடியூசர் பழைய விஷயங்கள் எப்படியெல்லாம் போகட்டும் ஆனா இந்த ஸ்கிரிப்டுக்காகவும் இதுக்கு முன்னாடி எடுத்த படத்துக்காகவும் நான் யோசிக்கிறேன் என்று சொல்லி பட வாய்ப்பு கொடுக்கிறார். இதனால் எழில் சந்தோஷப்பட்டு சிரிக்கிறார். அவருக்கு நன்றி சார் என்று சொல்லிவிட்டு கண்டிப்பா இந்த படத்தை நல்லா பண்ணுவோம் சார் என்று சொல்லுகிறார்.
பிறகு சந்தோஷமாக வீட்டுக்கு வந்த எழில் அமிர்தாவை தூக்கி சுத்துகிறார் உடனே நிலா என்னை தூக்குங்கப்பா என்று சொல்ல நிலா பாப்பாவையும் தூக்கி சுத்தி விட்டு என்னாச்சு என்னவென்று சொல்லுங்கள் என்று கேட்கிறார் உடனே படம் பண்ண வாய்ப்பு கிடைச்சிருக்கு என்று சொன்னவுடன் அமிர்தாவும் கண் கலங்கி சந்தோஷப்படுகிறார். உடனே எழில் கண்டிப்பா நம்ம நிலைமை மாறும் நீயும் நிலாவும் இனிமே கஷ்டப்பட வேண்டாம் நம்ப நம்ம வீட்ல சந்தோசமா எல்லார்கூடயும் ஒண்ணா இருக்கலாம் அது மட்டும் இல்லாம அம்மா பிரச்சனையே எல்லாத்தையும் தீர்த்துக்கலாம். இனிமே என்னை யாரும் இவ்வளவு வயசுக்கு அப்புறம் வேலைக்கு போகாம இருக்கியான்னு கேட்க மாட்டாங்க பாட்டியும் எதுவும் சொல்ல மாட்டாங்க என்றெல்லாம் எமோஷனலாக பேசுகிறார். அமிர்தா இதை அம்மா கிட்ட சொன்னீங்களா என்று சொல்ல இன்னும் இல்ல, வீட்டுக்கு வந்துட்டு போய் சொல்லலாம்னு சொல்லாம இருந்தேன் என்று சொல்லுகிறார். அவங்க தான் நடந்த இவ்ளோ டென்ஷன்ல கஷ்டத்துல இருப்பாங்க அவங்க கிட்ட சொன்னா சந்தோஷப்படுவாங்கல்ல என்று சொல்லிவிட்டு சரி நான் ஃபிரஷ் ஆயிட்டு வர ரெடியா இரு அம்மா கிட்ட போய் சொல்லிட்டு வரலாம் என்று சொல்லுகின்றன.
மூவரும் ரெஸ்டாரண்டுக்கு வர பாக்கியா இருப்பவர்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டே இருக்கிறார். என்னம்மா ஆச்சு நீங்க பரிமாறி கிட்டு இருக்கீங்க என்று கேட்க ஏன் நான் பரிமாற கூடாதா என்று சொல்லுகிறார். உடனே செல்வி ரெஸ்டாரன்ட் இருக்கு கூட்டம் வராததையும் ரெண்டு பேரு தான் வேலைக்கு இருக்காங்க என்பதையும் என்னிடம் சொல்ல வருத்தப்படுகிறார். வாய வச்சிகிட்ட சும்மா இருக்க மாட்டியா வந்த உடனே எல்லாத்தையும் சொல்லிடு நம்ம என்று சொல்லிவிட்டு அதெல்லாம் ஒன்னும் இல்ல நீ என்ன விஷயம் சொல்லு என்று சொல்ல இயலில் சந்தோஷமாக படம் பண்ண போகும் விஷயத்தை சொல்லுகிறார். உடனே பாக்யாவும் ரொம்ப சந்தோஷம் எழிலு என்று சொல்லுகிறார்.
பிறகு மூவரும் உட்கார்ந்து ஸ்வீட் சாப்பிட்டுக் கொண்டிருக்க பாக்யா எனக்கு இப்ப எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா என்ன வெளிய ஓடிப் போய் ரோட்டில் நின்னு கத்தி என் பையன் படம் பண்ண போறான் என்று சொல்லனும் போல இருக்கு என்று சொல்லி சந்தோஷப்படுகிறார். நீ கஷ்டப்பட்டதுக்கு பலன் கிடைச்சிருச்சு எழில் என்று சொல்ல நான் எங்கம்மா கஷ்டப்பட்டேன் நீ தானே கஷ்டப்பட்ட எனக்காக பேசின எனக்காக ஆறுதல் சொன்னேன் என்றெல்லாம் சொல்ல நான் உன்ன ராணி மாதிரி பார்த்திருப்பேன் மா என்று சொல்ல இப்ப மட்டும் நான் எப்படி இருக்க ராணி மாதிரி தான் இருக்கேன் என்று பாக்கிய சொல்லுகிறார். பிறகு அமிர்தா இந்த ரெஸ்டாரன்ட் நல்ல நிலைமைக்கு வர வரைக்கும் நான் ரெஸ்டாரண்டுக்கு வரலாமா என்று சொல்ல பாக்யா முதலில் வேண்டாம் என மறக்க அமிர்தா அவரை சம்மதிக்க வைக்கிறார்.
அமிர்தாவும் எழிலும் என்ன பேசிக் கொள்கிறார்கள்? பாக்யா என்ன சொல்லப் போகிறார்? என்று இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்..