
நான் அப்பாவை பார்த்தது அதுதான் கடைசி..கண்ணீர் விட்ட பிக்பாஸ் லாஸ்லியா..!
தனது அப்பா குறித்து கண்கலங்கி பேசியுள்ளார் பிக் பாஸ் லாஸ்லியா.

செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி,உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் லாஸ்லியா.
அந்த நிகழ்ச்சியில் கவின் லாஸ்லியா இருவரும் காதலித்து வந்தனர். அப்போது லாஸ்லியாவின் அப்பா பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தார். ஆனால் அவர் லாஸ்லியாவிடம் ஸ்ட்ரிக்ட்டாக நடந்து கொண்டது அனைவருக்கும் தெரியும்.
சமீபத்தில் லாஸ்லியாவிடம் இதை குறித்து கேட்டபோது அப்பா ஸ்ட்ரிட்டானவர் எல்லாம் கிடையாது அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்னன்னு தெரியாது. நான் சொல்லி தான் அவருக்கு எல்லாமே தெரியும். கனடாவில் இருந்து வந்திருந்த என்னோட அப்பா பிக் பாஸ் ஷோ கால் பண்ணி நான் மூணு நாள் தான் இங்கே இருக்க முடியும் மறுபடியும் கனடா போயிடுவேன் அதுக்குள்ள என் மகளை பார்க்கணும் வெளிய அனுப்ப சொல்லி கேட்டார் ஆனால் அதற்கு சேனல் ஒத்துக்கல அப்புறம் தான் உள்ள வந்து பார்த்தாரு நான் அப்பாவை கடைசியா பார்த்தது பிக் பாஸ் வீட்டில் தான் நான் வெளியே வரதுக்குள்ள எங்க அப்பா கனடா போயிட்டார் அதற்கு பிறகு நான் பிணமாக தான் எங்க அப்பாவை பார்த்தேன் என்று கண்கலங்கி உள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. லாஸ்லியா நடிப்பில் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் திரைப்படம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
