Pushpa 2

மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி வசூலில் பின் தங்கிய கேம் சேஞ்சேர்..இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

கேம் சேஞ்சேர் படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Game changer..How much has it collected so far
Game changer..How much has it collected so far

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவர் இயக்கும் படங்களுக்கு பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது என்றே சொல்லலாம். சமீபத்தில் இந்தியன் 2 திரைப்படம் இவரது இயக்கத்தில் எதிர்பார்ப்புடன் வெளியானது ஆனால் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அதனைத் தொடர்ந்து ராம்சரண் வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கி இருந்தார்.இந்த திரைப்படம் ஜனவரி பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் கியாரா அத்வாணி,அஞ்சலி, எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சுனில், யாஷிகா ஆனந்த் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

500 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் வசூலில் தூள் கிளப்பும் என்று எதிர்பார்த்த நிலையில் இதுவரை 200 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் பாடல்களுக்கு மட்டும் 75 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்தத் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் கலவையான விமர்சனங்களையும் பெற்று உள்ளது.

Game changer..How much has it collected so far
Game changer..How much has it collected so far