ராதிகா எடுத்த முடிவு, பாக்யா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!
ராதிகா முடிவால் பாக்யா வார்த்தை ஒன்றை சொல்லியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா ஃபோன் பேசிக் கொண்டிருக்கிற ராதிகாவின் அம்மா வந்து உனக்கு என்ன நடக்குதுன்னு தெரியுமா மாப்பிள்ளை ஏதாவது போன் பண்ணாரா என்று சொல்ல எதுவும் பண்ணல என்ன ஆச்சு என்று கேட்க அவர் குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்தோடு போயிருக்காரு எதிர்த்து தெருவில் இருக்க பொண்டாட்டிய பாக்கவோ இல்ல மயூ உடன் பிறந்தநாளுக்கு வந்து விஷ் பண்ணவும் டைம் இல்ல ஆனா 500 கிலோமீட்டர் தாண்டி கோவிலுக்கு போக மட்டும் தெரியுதா என்று சொல்லுகிறார். இப்பதான் மாப்பிள்ளை பத்தி எனக்கு தெரியுது என்று சொல்ல உடனே ராதிகா போன் போடுகிறார்.
ராதிகாவின் அம்மா கோபிக்கு என நினைக்க அவர் வீடு பேக் பண்றவர்களுக்கு போன் போட்டு ஒரு மணி நேரத்துல வாங்க என்று சொல்லுகிறார். பிறகு காரில் நால்வரும் பாட்டு போட்டுக்கொண்டு ஜாலியாக போய்க்கொண்டிருக்க மறுபக்கம் ராதிகா பேக்கிங் வேலையை செய்து விட்டு இருக்கிறார். கோபி ஊருக்கு போய் இருப்பதாக சொல்லி ஒரு வீடியோ ராதிகாவிற்கு அனுப்ப அவர் எதையும் கண்டு கொள்ளாமல் கிளம்ப முடிவெடுக்கிறார்.பாக்கியா ஜெனி மற்றும் செல்வி மூவரும் பேசிக்கொண்டிருக்க செல்வி ரொம்ப நாளாச்சு இல்லக்கா நீங்க உட்கார்ந்து என்று கேட்க அம்மா பையனோட பாசம் போராட்டத்தை பார்க்க என்னால் முடியாது அதனால் தான் கிச்சனுக்கு ரூமுக்கும் போயிருந்தேன் இப்பதான் நிம்மதியா இங்க உட்கார்ந்து இருக்கேன் என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து தெருவில் இருக்கும் ஒரு நபர் வந்து நான் வீடு பார்த்துகிட்டு இருந்தேன் ஆனா இப்போ இங்கவே ஒரு வீடு காலியாக போகுது அதோட டீடெயில்ஸ் ஏதாவது தெரியுமா என்று பாக்யாவிடம் கேட்க ஜெனி ஆன்ட்டி செகரட்டரியா இருந்தாலும் அவங்களுக்கு எப்படி அந்த டீடைல் தெரியும் என்று சொல்ல அது உங்களுக்கு தெரிஞ்சவங்க வீடுதான் என்று சொல்லி ராதிகா வீடு காலி பண்ணும் விஷயத்தை பாக்கியாவிடம் சொல்ல அவர் அதிர்ச்சி அடைகிறார்.
உடனே ஓடி வந்து வெளியில் பார்க்க பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருக்க பாக்யா பதற்றம் ஆகி ராதிகாவிற்கு ஃபோன் போட்டு நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் வரலாமா என்று கேட்கிறார் வேண்டாம் என சொல்ல ஒருவாட்டி மட்டும் பேசணும் என்று கெஞ்சி கேட்க வீட்டுக்கு வேணா பார்க்குக்கு வேணா வாங்க என்று கூப்பிடுகிறார். சரி என உடனே பாக்கா பார்க்கிற்கு வர ராதிகாவும் வருகிறார்.
எதுக்கு இந்த முடிவெடுத்து இருக்கீங்க அவசரப்பட்டு அவர் உடம்பு நல்லா ஆனதுக்கப்புறம் கண்டிப்பா உங்க வீட்டுக்கு வந்துருவாரு என்று சொல்ல நான் வீடு காலி பண்ணிட்டு போறதில்ல உங்க குடும்பத்துல எல்லாரும் ரொம்ப சந்தோஷம் தான் ஆனா நீங்க மட்டும் ஏன் வந்து என்கிட்ட பேசணும்னு கேட்கிறார். ஏற்கனவே நான் கல்யாணம் வாழ்க்கையில ஏமாந்துட்டேன் ஆனா ரெண்டாவது வாட்டியும் இது மாதிரி ஆகணும்னு நான் நினைக்கல இதுக்கு மேல என்னால என் மாற முடியாது. என்று முடிவில் உறுதியாக இருக்கிறார் ராதிகா. நான் உங்ககிட்ட என்னோட முன்னாள் கணவரை கல்யாணம் பண்ணுவாங்க என்ற முறையில் பேசல எனக்கு பழைய ராதிகா பிரண்டு இருந்தாங்க அவங்கள நினைச்சு தான் நான் பேசுறேன் என்று சொல்லுகிறார். ஆனா என்னால பழைய பாக்காவா உங்கள பாக்க முடியல என்று ராதிகா சொல்லுகிறார்.
நீங்க இதுக்கப்புறம் என்னை எப்ப பாப்பீங்கன்னு தெரியாது வேணும்னா கொஞ்ச நேரம் எங்க கூட இருங்க என்று சொல்லுகிறார் ராதிகா. உடனே பாக்யா நீங்க இன்னும் கூட யோசிச்சு முடிவெடுத்து இருக்கலாம் என்று சொல்ல ராதிகா எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.
மறுபக்கம் அனைவரும் திருநெல்வேலிக்கு சென்று விட அங்கு அவர்களது உறவினர் வந்து விசாரித்து பேசி கொண்டிருக்கின்றனர். அங்கு என்ன நடக்கிறது? ஈஸ்வரி என்ன சொல்லுகிறார்? இனியா என்ன கேட்கிறார்? கோபியின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.