முத்துவிற்கு தெரிந்த உண்மை, ரோகிணிக்கு காத்திருக்கும் ஆப்பு.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!
முத்துவிற்கு உண்மை தெரிய கோபமாக வீட்டுக்கு வருகிறார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மனோஜ் நண்பனை வைத்துக்கொண்டு அந்த ஏரியாவில் விசாரிக்க முத்து வருகிறார்.அந்த இளநீர் காரனிடம் நிற்க வைத்து இளநீர் வாங்கிய படி விசாரிக்க ஆமாங்க கதிர் என்ற ஒருத்தர் தங்கி இருந்தார் அவரை பார்க்க அடிக்கடி ஆள் வருவாங்க அதுவும் இல்லாம இவங்கள பத்தி ரொம்ப ஒருத்தருக்கு தெரியும் என்று சொல்லி அட்ரஸ் கொடுக்க முத்து அதை வாங்கிக்கொண்டு காலில் ஏற மனோஜ் பிரண்ட் அங்கே இருக்கும் கண்ணாடியை எடுக்க உடனே முத்து மீனாவிற்கு ஃபோன் போட்டு எங்க இருக்க என்று விசாரிக்கிறார் அம்மாவோட கடையில தான் இருக்கேன் என்று சொன்ன அங்கே இரு கூட ஒரு லக்கேஜ் இருக்கு இறக்கி விட்டு வர என்று சொல்ல அவர் நான் உங்க அண்ணனோட பிரண்டு பாஸ் மரியாதை இல்லையா என்று சொல்ல நான் அவனுக்கே மரியாதை கொடுக்க மாட்ட உனக்கு ஏன் கொடுக்கணும் என்று சொல்லுகிறார்.
பிறகு மீனா கடையில் நடந்த விஷயங்கள் பற்றி பேச முத்து காரில் இருந்து கண்ணாடியுடன் இறங்க சீதா சூப்பரா இருக்கு மாமா என்று சொல்லுகிறார். உடனே மீனாவிற்கும் கண்ணாடி போட்டு விட எப்படி இருக்கு என்று கேட்க சீதா அக்காவிட உங்களுக்கு தான் மாமா சூப்பரா இருக்கு என்று சொல்லுகிறார். மீனா யார் வாங்கி கொடுத்தது என்று கேட்க கனடா மேடம் தான் வாங்கி கொடுத்தாங்க என்று சொல்லுகிறார். பிறகு அனைவரும் செல்பி எடுத்துக் கொள்ள சீதா நான் போட்டோ பாக்குறேன் என போனை வாங்குகிறார் அதில், ஜீவாவுடன் முத்து எடுத்துக்கொண்ட போட்டோவை பார்த்துவிட்டு இந்த பொண்ணு உங்களுக்கு ஞாபகம் இல்லையா இதுதான் மனோஜ் லவ் பண்ண பொண்ணு என்று சொல்ல உடனே முத்து ஜீவா வீட்டிற்கு வந்து கோபமாக உள்ளே வருகிறார்.
நான்தான் கார் புக் பண்ணவே இல்ல எதுக்கு வந்தீங்க என்று கேட்க உன் பேரு ஜீவா தானே என்று சொல்லுகிறார். ஆமாம் என்று சொல்ல, நீங்க நடக்கிற விதம் எதுவுமே சரி இல்லையே என்று சொல்லி முத்துவை வெளியே போக சொல்ல முத்து மனோஜ் தெரியுமா என்று கேட்கிறார். நான் எதுக்கு உங்க கிட்ட சொல்லணும் என்று சொல்ல மனோஜ் என்னோட அண்ணன் தான் என்று சொல்லுகிறார். எங்க அப்பாவோட பணத்தை எடுத்துட்டு போன 27 லட்சம் நீ இப்ப எடுத்து வச்சா தான் நான் இங்கிருந்து போவ என்று சொல்ல சிரிக்கிறார் ஜீவா.
எதுக்கு சிரிக்கிற என்று கேட்க இப்ப வரைக்கும் உங்களையும் அந்த மனோஜ் ஏமாத்திட்டு தான் இருக்கானா நான் ஏற்கனவே போன வாட்டி வந்த அப்பவே அவன் என்ன பார்த்துட்டான் இன்னும் சொல்லப்போனா மனோஜோட வைஃப் என்னை மடக்கி 3 லட்சம் எக்ஸ்ட்ரா வாங்கினது அவதான் 30 லட்சம் கொடுத்துட்டு போலீஸ் ஸ்டேஷன்ல கையெழுத்து போட்டாச்சு அதுக்காக தான் நீங்களும் கையெழுத்து போட்டீங்க ஞாபகம் இருக்கா என்று சொல்லுகிறார். உடனே முத்துவும் அதிர்ச்சியாக நிற்க இரண்டுமே சேர்ந்து பிராட் வேலை பார்த்து இருக்கீங்க என்று யோசிக்கிறார். கொஞ்ச நேரம் கழித்து ஜீவாவிடம் நான் இதை வீட்டுல சொன்னா நம்ப மாட்டாங்க நீ வந்து சொல்லு என்று சொல்ல நான் எதுக்கு வரணும் என்று கேட்கிறார்.
நீ வந்தா தான் நம்புவாங்க என்று சொல்ல எனக்கும் அவங்க கிட்ட ஒரு பழி தீர்க்க வேண்டிய விஷயம் இருக்கு என்று சொல்லி வர சம்மதிக்கிறார்.
பிறகு முத்து வீட்டுக்கு வர என்ன நடக்கிறது? விஜயாவின் பதில் என்ன? முத்து என்ன சொல்லுகிறார்? என்பதை எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.