பாக்கியாவை சைட் அடிக்கும் கோபி, ராதிகா எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!
பாக்யாவை கோபி சைட் அடிக்க, ராதிகா முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி பாக்கியாவிடம் பார்க்கில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். நீ இவ்வளவு நல்லவ என்று தெரிஞ்சிருந்தா உன்னை விட்டு போயிருக்க மாட்டேன் பாக்யா என்று சொல்ல உடனே ராதிகா இது எல்லாம் பார்த்து விடுகிறார். பாக்யா கோபியிடம் இப்ப நீங்க இதை சொன்ன நான் சந்தோஷப்படுவேன் நினைக்கிறீர்களா என்று கேட்க அப்படியெல்லாம் ஒண்ணுமே கிடையாது என் வாழ்க்கையில நீங்க பண்ண ஒரு சந்தோஷம் என்ன தெரியுமா என்று சொல்ல கோபி ஆவலாக கேட்க நீங்க என்ன விட்டு போனதுதான் என்று சொல்ல கோபியின் முகம் மாறுகிறது இல்லனா நான் யாருன்னு எனக்கே தெரியாம போயிருக்கும் என்று சொல்லுகிறார்.
பிறகு ராதிகா வீட்டுக்கு வந்து டென்ஷனாக உட்கார என்னாச்சு என்று கேட்கிறார் ராதிகாவின் அம்மா. பிறகு பார்க்கில் கோபியுடன் பாக்யா இருந்த விஷயத்தை சொல்ல நான் போய் அவங்கள நாலு கேள்வி கேட்டுட்டு வருகிறேன் என்று சொல்லுகிறார். ராதிகா தடுத்து நிறுத்தி அதெல்லாம் ஒன்னும் வேணாம் யாரையும் நம்ப தொந்தரவு பண்ண வேண்டாம் நான் வீட்டை மாத்திட்டு போயிடலாம்னு இருக்கேன் என்று சொல்லுகிறார். உடனே ராதிகாவின் அம்மா மயூவிடம் நீ போன் பண்ணி உன் டாடி கிட்ட பேசு என்று சொல்ல, ராதிகா ஃபோனை வாங்கிக் கொள்கிறார். மயூவை உள்ள போக சொல்லிவிட்டு ராதிகாவின் அம்மாவிடம் ஏற்கனவே மயூவை பெத்த அப்பா போறப்பவே நான் அவளை வளர்த்துட்டேன் இவரு போனா என்னால வளர்க்க முடியாதா என்ன என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விடுகிறார்.
மறுபக்கம் கோபி நியூஸ் பேப்பர் பார்த்துக்கொண்டே பாக்கியாவை மறைந்து பார்க்கிறார். இதனைப் பார்த்து செல்வி உன்னை கோபி சார் சைட் அடிச்சுக்கிட்டு இருக்காரு என்று சொல்ல இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டுகிறேன் என்று சொல்லுகிறார் பாக்யா. உடனே ஜெனி வந்து நீ இன்னும் வேலைக்கு போகலையா செழியன் என்று கேட்க வேற லீவு எக்ஸ்டெண்ட் பண்ணி இருக்கேன் ஜெனி அப்பாவ பார்த்துக்கறதுக்காக என்று சொல்ல கோபியும் சொல்லி சமாளித்து அனுப்பி வைக்கிறார். உடனே அவர் பிரண்டுக்கு மெசேஜ் பண்ணி சொல்ல அவர் கம்பெனிக்கு வர சொல்லுகிறார் என்று செழியன் கிட்ட சொல்ல சந்தோஷப்படுகிறார்.
பிறகு கோபி ரூமில் உட்கார்ந்து போன் பேசிக் கொண்டிருக்க ஈஸ்வரி வருகிறார். கிச்சன்ல இருந்து நல்ல ஸ்மெல் வருது இல்லம்மா என்று சொல்ல அவர் சாதாரணமா சமைக்கும்போது உனக்கு இந்த ஸ்மால் நான் பாக்கியம் விருந்து சமைச்சா அவ்வளவுதான் என்று சொல்லுகிறார். பாக்யா எனக்கு சமைச்சு கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாலே நான் அவளுக்கு அவ்வளவு துரோகம் பண்ணி இருக்கலாமா என்று சொன்ன அப்படியெல்லாம் இல்ல உனக்காகவும் பாக்கியா சமைக்கிறேன்னு சொல்லிட்டா என்று சொல்லி கதையை மாற்றி பேசுகிறார். நீ ராதிகா வீட்டுக்கு போகாததனால நீ இங்கே இருக்கிறதுனால பாக்யாவுக்கும் மேல இருக்குற கோவம் குறைஞ்சிடுச்சு அவ உனக்காக தான் சமைச்சுக்கிட்டு இருக்கா என்றெல்லாம் அளந்து விடுகிறார். இருவரேன் என்று சொல்லிவிட்டு கிச்சனுக்கு சென்ற ஈஸ்வரி எல்லாரையும் சாப்பிட கூப்பிட யாரும் கொஞ்ச நேரம் ஆகும் என்று சொன்னதால் சரி நான் அப்ப ரூம்ல போய் சாப்பிட்டுக்குறேன் என்று தட்டில் போட்டு எடுத்துக் கொள்கிறார். கோபி சாருக்கு சமைக்கலையா என்று செல்வி கேட்க சமைக்கணும் எனக்காக யாரு சமைத்துக் கொடுப்பா நானே தான் சமைக்கணும் சாப்பிட்டு வந்து சமைப்பேன் என்று சொல்லுகிறார்.
ரூமுக்கு வந்த ஈஸ்வரி கோபியிடம் சொன்னேன்ல பாக்யா உனக்காக சமைச்சானு அவளே தட்டில் போட்டு கொடுத்தா என்று பொய் சொல்லி கோபியிடம் கொடுக்க நல்லா இருக்குமா என்று ருசித்து சாப்பிடுகிறார். இதனை செல்வி பார்த்துவிட்டு பாக்யாவிடம் சொல்ல இப்போ நான் என்ன பண்ண சொல்ற அத்தை கிட்ட போய் சண்டை போட சொல்றியா இல்ல அவர் கிட்ட இருந்து தட்ட புடுங்க சொல்றியா எது நடக்குதோ நடக்கட்டும் விட்டுவிடு என்று சொல்லுகிறார்.
ராதிகா கோபியிடம் பேச பாக்யாவின் வீட்டுக்கு வருகிறார்.ராதிகா என்ன சொல்லுகிறார்? ஈஸ்வரி அனுமதிக்கிறாரா? ராதிகா கோபியை பார்க்கிறாரா? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.