மீனாவிடம் உண்மையை சொன்ன முத்து, கண் கலங்கிய மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!
மீனாவிடம் முத்து உண்மையை சொல்ல கண் கலங்கியுள்ளார் மீனா.
தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா முத்துவைத் தேடி அலைகின்றார். செருப்பு தைக்கும் தாத்தா பாட்டியிடம் விசாரிக்க அவர்களும் தெரியாது என்று சொல்ல வேறு வழி இல்லாமல் ஒயின்ஷாப்பில் தேட,அங்கும் முத்து இல்லாததால் மீனா பதற்றம் ஆகிறார். வேற எங்க அக்கா போறது என்று கேட்க வேறு எங்கேயும் வேணா வீட்டில விட்டு என்று சொல்ல,சத்யா மீனாவை வீட்டில் விட்டுவிட்டு நான் போய் தேடிப் பார்க்கிறேன்கா என்று சொல்கிறார்.
மீனா கிச்சனுக்குள் வர பாத்திரங்கள் இருப்பதை பார்த்து எல்லாத்தையும் கழுவி வைத்துவிட்டு முத்துவிற்காக காத்திருக்கிறார் அண்ணாமலை வந்து முத்து வந்தனமா என்று கேட்க இன்னும் இல்ல மாமா என்று சொல்லுகிறார் நீ போய் சாப்பிடுமா என்று சொல்ல, அவர் வராமல் நான் என்னைக்கு மாமா சாப்பிட்டு இருக்கேன் நீங்க போய் தூங்குங்க என்று சொல்ல அண்ணாமலை தூங்காமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் அந்தநேரம் பார்த்து மீனாவின் அம்மா போன் பண்ண, மாப்ள வந்துட்டாரு அம்மா என்று கேட்க, இன்னும் வரலம்மா என்று சொல்ல அவர்களும் மீனாவிற்கு ஆறுதல் சொல்ல அந்த நேரம் முத்து உள்ளே வருகிறார் உடனே மீனா வந்துட்டாரு அப்புறம் கூப்பிடுறேன் என்று போனை வைத்து விடுகிறார்.
முத்துவை அண்ணாமலை போன் பண்ணி இருந்தா என்ன என்று சொல்ல திருச்சி எடுக்க ஒரு சவாரிக்கு போயிருந்தேன்பா அதனால தான் போன் பண்ண முடியல என்று சொல்ல கார்ல தான் சார்ஜ் இருக்குமே என்று கேட்கிறார். எடுத்துட்டு போல மறந்துட்டேன் பா என்று சொல்ல அண்ணாமலை போய் சாப்பிடு, நீ வராம முத்து சாப்பிடாம எங்கெங்கெல்லாம் தேடி அலைஞ்சிட்டு இருந்தா தெரியுமா ஒரு வார்த்தை சொன்னால் என்ன என்று திட்டி விட்டு சென்று விடுகிறார் மீனா சாப்பாடு எடுத்து வைக்கிறேன் வாங்க என்று சொல்ல ஒரு நிமிஷம் வா என்று கூப்பிட்டு இன்னைக்கு சவாரில சம்பாதித்தது 8500 என்று சொல்ல மீனா அமைதியாக நின்று பார்க்கிறார்.
நீ நேத்து நான்தான் அதிகமா சம்பாதிச்சு இருக்குன்னு சொன்னேன்ல அதுக்காக தான் நான் இன்னைக்கு திருச்சி சவாரி கேட்டு போன இப்ப சம்பாதிச்சுட்டேன் போன அதனாலதான் ஆஃப் பண்ண யாருகிட்டயும் பேசல என்று சொல்ல மீனா உரிமை இருக்கிறவங்க கிட்ட கூட யோசிச்சு தான் பேசணும் இல்ல, உங்கள தேடி எங்க எங்களால் ஆளுங்க தெரியுமா உங்ககிட்ட பேசிட மாட்டேனா நான் எவ்வளவு கஷ்டத்துல இருந்தும் தெரியுமா என்றெல்லாம் சொல்லி அழுகிறார்.
முத்து என்ன சொல்லுகிறார்? மீனாவின் பதில் என்ன? முத்து மீனாவை சமாதானம் படுத்துகிறாரா? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.