நந்தினிக்காக சூர்யா செய்த செயல்,மாதவி,சுரேகாவை திட்டிய சுந்தரவல்லி,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி எல்லாத்தையும் தட்டிவிட்டு பிரச்சனை செய்ய சூர்யா வேகமாக கீழே இறங்கி போக அருணாச்சலமும் இறங்கி போகிறார். பிறகு அஞ்சு நிமிஷத்துக்கு மேல இங்க யாரும் இருக்கக் கூடாது என்று அதட்டி விட்டு சென்று விடுகிறார். உடனே மாதவி சுந்தரவல்லி சமாதானப்படுத்த போக சுரேகா ஏற்கனவே நம்ப அம்மாகிட்ட இத பத்தி சொல்லலைன்னு கோவமா இருக்காங்க என்று யோசித்துக் கொண்டு உட்காருகின்றனர்.
உடனே நந்தினி என் அம்மாக்கா என் அம்மா அக்கா என்று கதறி அழுகிறார். உடனே விஜி எனக்கே இன்னும் பதட்டம் நிக்கல நந்தினி உன்ன நெனச்சு பாக்கவே கஷ்டமா இருக்கு என்ற சொல்ல, நந்தினி அம்மாவை நினைத்தும் அம்மாவை பற்றி பேசி விஜியிடம் சொல்லி கதறி அழுகிறார். என்னால இந்த சின்ன விஷயத்தை கூட எங்க அம்மாவுக்கு என்னால செய்ய முடியல. எல்லா பிரச்சனைக்கும் அழுவதை தவிர எனக்கு வேற எதுவுமே நடக்கல எல்லா பிரச்சனையும் எனக்கு மட்டும்தான் வருது. நான் எங்க ஊர்ல எவ்வளவு தைரியமா இருந்தா தெரியுமா என் தங்கச்சியை தைரியமா வளர்த்த ஆனால் இந்த ஊரு இந்த வீடு எதுவுமே எனக்கு புடிக்கல எனக்கு என்ன நெனச்சா ரொம்ப அசிங்கமா இருக்கு என்று அழுது கொண்டே இருக்க விஜி அவருக்கு ஆறுதல் சொல்லுகிறார்.
ஆனா இவ்வளவு பிரச்சனை நடந்தும் சூர்யா தம்பி எதாவது பேசி இருக்கலாம் ஆனா அவரு எதுவும் பேசாம போனது தான் கஷ்டமா இருக்கு என்று பேசிக் கொண்டிருக்க அம்மாச்சி போன் போடுகிறார். நான் என்ன சொல்றதுக்கா என்று கேட்க போன எடுக்காம விட்டுடுமா என்று சொல்ல இல்லை ஏதாவது பிரச்சனை என நினைத்துப்பார்கள் நான் ஏதாவது சொல்லி சமாளிச்சுக்கிற அக்கா என்று போன் எடுத்துப் பேசுகிறார்.
நந்தினி அழுவதை சமாளித்துக் கொண்டு சாமி கும்பிட்டு விட்டதாக பேச நானும் கும்பிட்ட நந்தினி என்று சொல்லி சரி நான் வந்தவங்கள அனுப்பிட்டு அப்புறம் பேசுறேன் அம்மாச்சி என்று சொல்லி போனை வைக்கிறார். பிறகு விஜியை கட்டி பிடித்து நந்தினி அழுகிறார். மறுபக்கம் சூர்யா நண்பனுக்கு போன் போட்டு பெண்கள் என்றாலே அமைதியா இருப்பாங்க ஆனா என்னோட தாய்க்குலம் ஏன் இப்படி இருக்காங்கன்னு தெரியல. பிறகு உனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு என்று சொல்லி அவரிடம் எதையோ சொல்லுகிறார். எனக்கு நீதான் எல்லாமே அரேஞ்ச் பண்ணனும் உன்ன விட்டா எனக்கு யாரும் இல்லை நீ தான் பண்ணனும் என்று சொல்லி ஃபோனை வைக்கிறார்.
பிறகு சுந்தரவல்லி அருணாச்சலத்திடம் நீ பண்ணது அசிங்கமா கூட இல்ல அருவருப்பா தான் இருந்துச்சு அவ ஏற்கனவே விஜி வீட்ல பண்ணிக்கிறேன்னு தான் சொன்னா ஆனா அந்த விஷயத்துல நீ இப்படி நடந்துக்க மாட்ட என்ற நம்பிக்கையில் சொன்னேன். ஆனால் அந்த பொண்ணு கூட உன்ன கரெக்டா புரிஞ்சி வச்சிருக்கா ஆனால் என்னால் தான் புரிஞ்சுக்க முடியல. எல்லாத்தையும் நீ பொய்யா கிட்ட, நீ அசிங்கப்படுத்தியது நந்தினி இல்ல என்னதான் என் நம்பிக்கையே பொய்யா கிட்ட, வெறி புடிச்ச மிருகம் மாதிரி பண்ணாத என்று சொல்ல, நீங்க என்ன வேணா சொல்லுங்க ஆனா அவளை இந்த வீட்டை விட்டு துரத்தி என் ஸ்டேட்டஸ்க்கு ஏத்த மருமகளை நான் கூட்டிட்டு வருவேன் என்று சொல்ல அருணாச்சலம் உன்னை திருத்தவே முடியாது என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
சூர்யா காரில் ஐந்து பெண்களை கூட்டி வந்து இறக்கிவிட்டு குடும்பத்தில் இருக்கும் அனைவரும் வெளியே வாங்க என்று கூப்பிடுகிறார். அனைவரும் வெளியே வருகின்றனர். எல்லாரும் வந்தாச்சுல்ல என்று கேட்டுவிட்டு எல்லாரும் இருக்காங்க நந்தினி எங்க டாடி என்று கேட்கிறார். சூர்யாவின் குரல் கேட்டு விஜி வந்து எட்டிப் பார்க்க நந்தினி பார்த்து இருவரும் கீழே வாங்க என்று சொல்லுகிறார். ஆனால் நந்தினி வர தயங்க ஏன் நந்தினி யோசிக்கிற என்று விஜி கேட்கிறார். அவர் இப்படி பண்ணாலே அவங்க அம்மாவ வெருப்பேத்த தான் பண்ணுவாரு என்று சொல்லுகிறார். உடனே நீ வர மாட்ட நானே வர என்று சொல்லி மேலே வந்து கூப்பிட நந்தினி முடியாது என்று சொல்லியும் கையைப் பிடித்து வெளியில் இழுத்து வருகிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது
இன்றைய ப்ரோமோவில் இந்த வீட்ல அசிங்கமா ஒருத்தி வந்து உட்கார்ந்து கிட்டு இருக்கா அவள வெளியே அனுப்ப நீங்க ஒன்னும் பண்ண மாதிரி தெரியல என்று மாதவி சுரேகாவை சுந்தரவல்லி திட்டுகிறார்.
மறுபக்கம் சூர்யா எல்லா பொருட்களையும் வாங்கிக் கொண்டு வந்த நந்தினி இடம் கொடுத்து உனக்கு என்ன பண்ணனுமோ அதை பண்ணு என்று சொல்கிறார் சூர்யா. இதையும் நீங்க உங்க அம்மாவை வெறுப்பேத்தறதுக்காக தானே பண்றீங்க என்று கேட்க, நீ யோசிக்கிறது தப்பு, யோசிச்சு தான் பண்ற என்று சொல்லுகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.