சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ‘கூலி’ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இப்படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில் அடுத்தடுத்து தான் இயக்கவிருக்கும் படங்கள் குறித்து லோகேஷ் தெரிவிக்கையில்,
‘அடுத்து கார்த்தி நடிப்பில் ‘கைதி 2’ இயக்கவுள்ளேன். கமல் சாருடன் ‘விக்ரம் 2’, சூர்யாவுடன் ‘ரோலக்ஸ்’ ஆகிய படங்கள் உள்ளன. இப்படங்கள் அனைத்தும் முன்பே முடிவானவை.
மாஸ்டர் 2, லியோ 2 ஆகியவை இயக்க ஆசை தான். ஆனால், விஜய் இல்லை. அவர் மீண்டும் திரையுலகிற்கு எப்போது வருவார் எனத் தெரியாது. இப்படங்கள் அனைத்துமே நடிகர்களின் தேதிகள், எனது தேதிகள் உள்ளிட்டவற்றை வைத்து நடக்கும். எப்போது என்று யாருக்கும் தெரியாது.
‘கைதி 2’ படத்துக்கு பின்பு அமீர்கான் படம் இயக்கவுள்ளேன். அதனை இந்திப் படம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. அது உலகளாவிய படம் என்று சொல்வேன். அதுவொரு அற்புதமான கதை. மூன்று, நான்கு மாதங்களாக அவருடன் பேசி வருகிறேன்.
அமீர்கானுக்கும், கமல்ஹாசனுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. அவர் ஒரு படத்தை எப்படி அணுகிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அது சூப்பர் ஹீரோ படத்தைத் தாண்டி மிகப்பெரிய ஆக்ஷன் படமாக இருக்கும். அக்கதையை பல வருடங்களுக்கு முன்பே எழுதிவிட்டேன்’ என லோகேஷ் கூறினார். இதற்கிடையே அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. லோகேஷ் செம்ம பிஸி.!