ஆதவ் கண்ணதாசன் – வாணி போஜன் நடிப்பில், பரணி சேகரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஹாரர் திரில்லர் திரைப்படமான “தாழ் திறவா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் இந்தியன் பவிலியனில், இப்படத்தின் டீசர் மே 19 அன்று திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில், சர்வதேச ரசிகர்களிடமும் இப்படம் கவனம் பெற்றுள்ளது.
பழமையான எழுத்துக்கள், மர்மமான ஆபத்துகள், அமானுஷ்ய சம்பவங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், அகழ்வாராய்ச்சி பின்னணியுடன் உருவாகும் வித்தியாசமான ஹாரர் அனுபவமாக இருக்கும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
வெளியான போஸ்டர்களில் இருள் சூழ்ந்த மர்மமான காட்சிகள், ரகசிய கதவுகள், அச்சத்தில் உறையும் கதாபாத்திரங்கள் போன்ற அம்சங்கள் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளன.
படத்தில் ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன், சுரேஷ் மேனன், சுப்பு பஞ்சு, ஷ்யாம் பிரசாத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.