உத்தரா உன்னிகிருஷ்ணன் குரலில் ‘ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்’

இந்திய பக்தி மரபில் மிகவும் போற்றப்படும் ‘ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்’, இளம் பாடகி உத்தரா உன்னிகிருஷ்ணனின் குரலில் புதிய நவீன வடிவில் வெளியாகியுள்ளது.

ஜியோ சாவன், கானா, ஆப்பிள் மியூசிக், ஸ்பாட்டிஃபை, யூடியூப் மியூசிக் உள்ளிட்ட தளங்களில் மே 20 முதல் பாடல் வெளியாகியுள்ளது. லிரிக்கல் வீடியோ மே 23 அன்று Rajshri Soul யூடியூப் சேனலில் வெளியிடப்படுகிறது.

எம்.எஸ். சுப்புலட்சுமி பிரபலப்படுத்திய இந்த காலத்தால் அழியாத பக்திப் பாடலுக்கு, புதிய தலைமுறையினரையும் ஈர்க்கும் வகையில் பிரித்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார். Sea Records தயாரிப்பில் உருவான இந்த புதிய பதிப்பு, பக்தி உணர்வையும் சமகால இசை அணுகுமுறையையும் இணைக்கும் முயற்சியாக அமைந்துள்ளது.

‘சைவம்’ படத்தின் ‘அழகே அழகே’ பாடல் மூலம் தேசிய விருது பெற்ற உத்தரா உன்னிகிருஷ்ணன், கர்நாடக இசை, திரைப்பட இசை மற்றும் ஃபியூஷன் இசை வடிவங்களில் தனது தனித்துவத்தை தொடர்ந்து நிரூபித்து வருகிறார்.

https://music.youtube.com/watch?v=UM4x4Se8Ah4

 

‘Sri Venkatesa Suprabhatam’ in Uttara Unnikrishnan’s VoiceSri Venkatesa SuprabhatamUttara Unnikrishnanஉத்தரா உன்னிகிருஷ்ணன்ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்