விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட டீசர் ரிலீஸ் எப்போது?

விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழா வழக்கமாக சென்னையில் நடைபெறும் நிலையில், அவரின் கடைசிப் படமாக கூறப்படும் ‘ஜனநாயகன்’ இசை விழா மலேசியாசில் வரும் 27-ந்தேதி நடைபெறவுள்ளது.

விழாவில் விஜய் படங்களின் பாடல்கள் பாடப்பட்டு, கான்செர்ட் ஒன்றும் நடைபெற இருக்கிறது. இப்படம், தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘பகவந்த் கேசரி’ படத்தை தமிழுக்கேற்ப மாற்றங்களுடன் ஹெச்.வினோத் இய்க்கியுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தில் விஜய்யுடன் பாபி தியோல், கெளதம் மேனன், பிரகாஷ்ராஜ் மற்றும் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி ‘ஜனநாயகன்’ பான் இந்திய ரிலீசாக திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், ஆடியோ லான்ச் ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். விழாவுக்கு முன்னதாக, இப்படத்தின் டீசரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அனிருத் இசையில் ‘ஜனநாயகன்’ பர்ஸ்ட் சிங்கிள் ‘தளபதி கச்சேரி’ என்ற பெயரில் வெளியாகி இந்திய அளவில் முதலிடம் பெற்றது. விரைவில் 2-வது பாடலையும், அதனைத் தொடர்ந்து டீசர் ரிலீசாக இருப்பதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

vijay starring jana nayagan movie teaser release update

 

actor vijayjananayagan movieMusicஜனநாயகன்ஹெச்.வினோத்