சாருலதா மணியின் பாடலை வெளியிட்டார் விஜய் சேதுபதி!

“மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி வெளியிட்ட புதிய சுயாதீன பாடல் – சாருலதா மணியின் ‘தென்றலில்’

“அஞ்சு வண்ணப் பூவே” போன்ற ஹிட் பாடலின் வெற்றியைத் தொடர்ந்து, பிரபல பின்னணிப் பாடகி டாக்டர் சாருலதா மணி தனது புதிய சுயாதீன (Independent) பாடலான ‘தென்றலில்’ மூலம் மீண்டும் இசை ரசிகர்களை கவர வந்துள்ளார். இந்தப் பாடலை “மக்கள் செல்வன்” விஜய் சேதுபதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகி என மூன்று பரிமாணங்களிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியுள்ள சாருலதா மணி, இந்த ‘தென்றலில்’ பாடலை ஒரு சிறப்பு மைல்கல் படைப்பாக உருவாக்கியுள்ளார். பாரம்பரிய இசையும், நவீன இசையும் இணைந்த அவரது தனித்துவமான பாணி, இந்தப் பாடலிலும் தெளிவாக வெளிப்படுகிறது.

முன்னதாக “என் உச்சி மண்டைல”, “Chillax”, “தீயே தீயே”, “கண்ணுக்குள் பொத்திவெப்பேன்”, “Sada Nannu” போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ள சாருலதா மணி, தனது குரல் வளத்தால் ரசிகர்களின் மனதில் தனி இடம் பெற்றவர். ஆஸ்திரேலியாவின் Griffith University-யில் இசையில் PhD மற்றும் Postdoctoral Fellowship முடித்துள்ள அவர், தற்போது இசையமைப்பாளராகவும் புதிய பாதையை தொடங்கியுள்ளார்.

Divo / Warner Music South வெளியீடாக உருவான இந்த ‘தென்றலில்’ பாடல், ஏப்ரல் 30, 2026 அன்று அனைத்து டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் தளங்களிலும் வெளியாகியுள்ளது. மேலும், இந்தப் பாடலின் இசை வீடியோ YouTube-இலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் புதிய முகங்கள் மாளவிகா மற்றும் தவன் நடித்துள்ளனர். தரேன் கார்த்திக் இயக்கத்தில் உருவான இந்த மியூசிக் வீடியோவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

வெளியீட்டு விவரங்கள்:

* பாடல்: தென்றலில்
* இசை / வரிகள் / குரல்: டாக்டர் சாருலதா மணி
* வெளியீடு: ஏப்ரல் 30, 2026
* லேபல்: Divo / Warner Music South
* செய்தித் தொடர்பு: நிகில் முருகன்

இந்த புதிய முயற்சி, இசைப் பிரியர்களுக்கு ஒரு இனிமையான அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Charulatha ManiThendralilVijay Sethupathiவிஜய் சேதுபதி