விஷால் பாடிய பாட்டால், எங்களுக்கு காதில் ரத்தமே வந்து விட்டது: வரலட்சுமி கலாய்ப்பு..

நாளை ‘மதகஜராஜா’ படம் ரிலீஸாகும் நிலையில், அப்படத்தின் ஷூட் குறித்து வரலட்சுமி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் பார்ப்போம்..

சரத்குமார்-முதல் மனைவி சாயாதேவி மகள் வரலட்சுமி. இவர், விக்னேஷ் சிவன் இயக்கிய ‘போடா போடி’ படத்தில் அறிமுகமாகி, தாரை தப்பட்டை, சர்கார் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில், கடந்த வருடம் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். நிக்கோலாய்க்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் விஷால் குறித்து அவர் பேசியிருக்கும் விஷயம் வைரலாகி வருகிறது.

அதாவது, சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுடன் வரலட்சுமி நடித்த ‘மதகஜராஜா’ நாளை ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், விஷால் அந்தப் படத்தில் பாடிய பாடல் குறித்து வரலட்சுமி கூறியதாவது:

‘அய்யோ விஷால் பாடிய அந்தப் பாடலை கோரியோகிராஃபி செய்தபோது, எங்களுக்கு காதில் ரத்தமே வந்துவிட்டது. பிருந்தா மாஸ்டருக்கெல்லாம் அழுகையே வந்துவிட்டது.

மூன்று நாட்கள் தொடர்ந்து ஸ்பீக்கரில் அதே பாடலைத்தான் கேட்கும் நிலைமை இருந்தது. அதே சமயம் அந்தப் பாடல் ஒரு ஃபன்னாக தான் இருக்க வேண்டும் என்பதுதான் ஐடியா’ என்றார்.

முன்னதாக விஷாலும் வரலட்சுமியும் காதலித்து வந்ததாகவும், சரத்குமாருக்கும் விஷாலுக்கும் நடிகர் சங்க விவகாரத்தில் ஏற்பட்ட மோதலால் இந்தக் காதல் பாதியில் முடிந்து விட்டதாக ஒரு தகவல் வெளியானது நினைவுகூரத்தக்கது.

varalakshmi shares throwback incident about actor vishal singing
actor vishalactress varalakshmimadha gaja raja movieதிருமணம்விக்னேஷ் சிவன்