வாடிவாசல் படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் மே ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் வாடிவாசல் என்ற திரைப்படம் உருவாகும் என்ற அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் படப்பிடிப்பிற்கு தொடர்ந்து தாமதமாகி கொண்டே இருந்தது.
கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பிலும், ஜிவி பிரகாஷ் இசையிலும் உருவாக உள்ள இந்த படத்திற்கு சூர்யா உண்மையான காளையுடன் பயிற்சியிலும் ஈடுபட்டு உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில் இந்த படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தின் படத்திற்கு பணிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாகவும் அதற்கான வேலைகளில் வெற்றிமாறன் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.