சூர்யா நடிக்கும் ‘கருப்பு’ படக்குழு மீது திரிஷா அப்செட்..

திரிஷா நடிப்பில் இந்த ஆண்டு ஐடெண்டிட்டி, விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப் என நான்கு படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டன. அடுத்ததாக, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் ‘கருப்பு’ படத்தில் பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் திரிஷா. இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சூர்யாவின் 50-வது பிறந்தநாள் கடந்த ஜூலை 23-ந்தேதி கொண்டாடப்பட்டது. அன்று ‘கருப்பு’ படத்தின் டீசரை படக்குழுவினர் ரிலீஸ் செய்தனர். இது, சூர்யா ரசிகர்களுக்கு செம ட்ரீட் ஆக அமைந்திருந்தது. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இச்சூழலில் ‘கருப்பு’ டீசர் வெளியான பிறகு படக்குழு மீது திரிஷா அப்செட்டில் இருக்கிறாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் ‘கருப்பு’ படம் குறித்த போஸ்டர்களையோ, டீசரையோ தனது இணையதள பக்கங்களில் பதிவு செய்யவில்லை. படத்தில் ஹீரோயினாக நடித்தும் அமைதியாக இருப்பது பேசுபொருள் ஆகியுள்ளது.

டீசரில் அவர் நடித்த காட்சிகள் ஒன்றுகூட இடம்பெறாததால், அவர் படக்குழு மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூட திரிஷா தெரிவிக்கவில்லை.

கடந்த மாதம் விஜய்யின் பிறந்த நாளுக்கு போட்டோ போட்டு வாழ்த்து சொன்ன திரிஷா, சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தும் அவருக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்? என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதிருப்தியான மனநிலையில், பெயரளவுக்கு ஏதோ வாட்ஸ் அப் வாயிலாக, திரிஷா சூர்யாவுக்கு மெசேஜ் மூலம் வாழ்த்து தெரிவித்திருப்பார் எனவும் கூறப்படுகிறது.

trisha upset over karuppu movie her silence sparks controversy

 

actor suriyaactress trishakaruppu movieசூர்யாதிரிஷா