20 ஆண்டுகளுக்கு முன் வெளியான ஒரு திரைப்படம் உலக சாதனை படைத்துள்ளது. இது குறித்த விவரம் பார்ப்போம்..
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து, மீண்டும் அஜித்துக்கு ஜோடியாக ‘குட் பேட் அக்லி’ மற்றும் மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாகவும் திரிஷா நடித்து முடித்துள்ளார். ‘தக் லைஃப்’ படம் வருகிற ஜூன் மாதம் திரைக்கு வருகிறது.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பிசியாக நடித்து வரும் திரிஷா, அங்கு சிரஞ்சீவி உடன் ‘விஸ்வம்பரா’ படத்தில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், நடிகை திரிஷா நடித்த தெலுங்கு படம் ஒன்று உலக சாதனை படைத்துள்ளது. அதுவும் டிவியில் அதிக முறை ஒளிபரப்பான படம். அதாவது, தொலைக்காட்சியில் இதுவரை 1500 முறை ஒளிபரப்பாகி உள்ளது உலகளவில் எந்த படமும் இத்தனை முறை ஒளிபரப்பாகவில்லை.
இவ்வாறு ஓர் அரிய சாதனையை படைத்த படத்தின் பெயர் அதடு. இப்படம் கடந்த 2005-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது. மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் திரிஷா. இப்படத்தை திரிவிக்ரம் இயக்கியிருந்தார்
இப்படம் 20 ஆண்டுகளுக்கு சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் பஞ்ச் வசனங்களும், மிரட்டலான சண்டைக் காட்சிகளுடன் கூடிய பக்கா கமர்ஷியல் படமாக உள்ளதால் டிஆர்பி-யில் தெறித்து வருகிறது. இதனால், ‘அதடு’ படத்தை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.