தமிழக அரசின் திரைப்பட விருதுகள்.. குஷியில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா..!

தமிழக அரசின் திரைப்பட விருதுகளுக்காக விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா சந்தோஷப்பட்டுள்ளனர்.

Tamil Nadu Government Film Awards.. Vignesh Sivan and Nayanthara in Khushi..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் நயன்தாரா இவர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் படம் இயக்குவது நடிப்பது என பிசியாக இருந்தாலும் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனமும் வைத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான படங்களுக்கு தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதற்கு விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் முதல்வருக்கும் தேர்வு குழுவிற்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

அதில் தரமான படங்கள் மூலம் ரசிகர்களை மகிழ்விப்பதே தங்களின் நோக்கம் என தெரிவித்துள்ளனர். அறம் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை காண விருது நயன்தாராவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர் படக்குழுவிற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் திரைப்படம் பெண்கள் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு வெளியான இந்த திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான விருது பெற்றுள்ளதும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளனர் இது மட்டும் இல்லாமல் சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய அதன் வலுவான கருத்தை திரையில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் இயக்கிய இயக்குனர் மிலிட் ராகுக்கு ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் நன்றி தெரிவிக்கிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த அங்கீகாரம் பெரும் ஊக்கமாகவும் அமைந்துள்ளது என்பதை ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறது என குறிப்பிட்டுள்ளனர். இவர்களின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Tamil Nadu Government Film Awards.. Vignesh Sivan and Nayanthara in Khushi..!
Film AwardsLatest newsnayantharaTamil cinemaTamil NaduTamil Nadu Government Film Awards.. Vignesh Sivan and Nayanthara in Khushi..!Vignesh Shivanviralஅறம்நயன்தாராநெற்றிக்கண்ரவுடி பிக்சர்ஸ்விக்னேஷ் சிவன்