மகளுக்கு பட்டமளிப்பு விழா நிகழ்வை ஜோதிகா பகிர்ந்துள்ளார். இது குறித்த கோலாகலம் பார்ப்போம்..
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான ‘ரெட்ரோ’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. வசூலில் வரவேற்பினை பெற்றதாக படக்குழுவினர் அறிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, சூர்யா தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். படத்தில் சூர்யா இரண்டு வித ரோல்களில் வருகிறார். ஒரு கதாபாத்திரத்தில் வக்கீலாகவும், மற்றொரு ரோலில் அய்யனாராகவும் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் திரிஷா, ஸ்வாசிகா, ஷிவிதா, அனகா மாயாரவி, யோகிபாபு, சுப்ரீத் ரெட்டி, இந்திரன்ஸ் உற்பட பலரும் நடித்து வருகின்றனர். ‘சூர்யா 45’ படத்தினை ஆன்மீகம் கலந்த திரில்லர் படமாக ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வருவதாக கூறப்படுகிறது. இப்படம், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து, சூர்யா ‘லக்கி பாஸ்கர்’ பட இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இச்சூழலில் மும்பையில் குடியிருக்கும் சூர்யா, ஜோதிகா தம்பதியினரின் மகள் தியா தனது படிப்பை நிறைவு செய்துள்ளார். அவருக்கு பட்டமளிப்பு விழா நடந்து முடிந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் சூர்யா, ஜோதிகா, தியாவின் தம்பி தேவ், சிவக்குமார், அவரின் மனைவி மற்றும் ஜோதிகாவின் பெற்றோர்கள் உள்பட பலரும் பங்கேற்றுள்ளனர். தியா பட்டம் பெறும் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஜோதிகா. இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.