ஒரு பெண் என்னைப் பார்த்து யாசகம் பெறும் நபர் என நினைத்து விட்டார் : ரஜினிகாந்த் ஓபன் டாக்..!

ஒரு பெண் என்னைப் பார்த்து யாசகம் பெறும் நபர் என கூறிவிட்டதாக சொல்லி உள்ளார்.

super star rajinikanth latest speech viral

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் முன்பு நடந்த பழைய பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த் பேசியது குறித்து தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

அதாவது மாறுவேடத்தில் ஒரு முறை பெங்களூருவில் இருக்கும் கோவில் ஒன்றுக்கு சென்று இருந்தேன் அப்போது ஒரு பெண் என்னைப் பார்த்து யாசகம் பெறும் நபர் என நினைத்து கையில் பத்து ரூபாய் தர்மமாக கொடுத்தார் நான் எதுவும் சொல்லாமல் அதை வாங்கிக் கொண்டேன்.

சிறிது நேரம் கழித்து என்னிடமிருந்த 200 ரூபாயை கோயில் உண்டியலில் போட்டதை கவனித்த அந்தப் பெண் என்னைப் பின்தொடர்ந்து வந்தார் பிறகு நான் காரில் ஏறி தலையில் கட்டி இருந்த துணியை அவிழ்த்தபிறகு என்னை அதிர்ச்சியாகி பார்த்தார் என்று கூறியிருக்கிறார்.

இவர் கூறிய இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

super star rajinikanth latest speech viral
latest speechRajinikanthsuper starsuper star rajinikanth latest speech viralviralகூலிசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்