சந்தீப் கிஷன் நடிக்கும் ‘பவர் பேட்டா’ படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ் வெளியீடு!

விஜய் சில்லா மற்றும் ஷஷி தேவிரெட்டி தலைமையிலான 70mm Entertainments நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘பவர் பேட்டா’ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை எழுத்தாளராக இருந்து இயக்குநராக மாறிய கிருஷ்ண சைதன்யா இயக்குகிறார். சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் மாஸ் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

திரையரங்க முதல் நாள் கொண்டாட்ட சூழலுடன் தொடங்கும் இந்த கிளிம்ப்ஸில், ரசிகர்களின் ஆரவாரத்துக்கு நடுவே சந்தீப் கிஷன் ஸ்டைலிஷ் என்ட்ரி கொடுக்கிறார். “சிங்கம்” குறித்து அவர் பேசும் பன்ச் வசனங்களும், பின்னர் அந்த மண்ணின் அதிகாரத்தையும் ஆற்றலையும் விவரிக்கும் காட்சிகளும் மாஸ் உணர்வை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக திரையரங்க திரையில் பட்டாசுகள் வெடிக்கும் காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

இந்த படத்தில் “சேனாபதி ரவி” என்ற கதாபாத்திரத்தில் சந்தீப் கிஷன் நடிக்கிறார். முரட்டுத்தனமான லுக், ஸ்டைலிஷ் கண்ணாடி, வித்தியாசமான உடை மற்றும் மிரட்டலான உடல் மொழி மூலம் அவர் தனித்துவமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். அவரது திரை ஆளுமை, அதிரடி வசனங்கள் மற்றும் ஆட்டிட்யூட் கிளிம்ப்ஸின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.

இயக்குநர் கிருஷ்ண சைதன்யா ஒரு வலுவான மாஸ் கதாபாத்திரத்தை உருவாக்கியிருப்பது கிளிம்ப்ஸில் தெளிவாக தெரிகிறது. சிகரெட் பற்றவைக்கும் சாதாரண தருணத்தையே கோபமும் தீவிரமும் நிறைந்த காட்சியாக மாற்றியிருப்பது அவரது இயக்கத் திறனை வெளிப்படுத்துகிறது.

ஒளிப்பதிவாளர் மதி பீரியட் பின்னணியைக் கச்சிதமாக காட்சிப்படுத்தியுள்ளார். மணி சர்மாவின் பின்னணி இசை கிளிம்ப்ஸின் அதிரடியை மேலும் உயர்த்துகிறது. தேசிய விருது பெற்ற எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பை கவனித்துள்ள நிலையில், சப்பாணி ராமகிருஷ்ணா மற்றும் மோனிகா தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொண்டுள்ளனர். சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் இணைந்து சவுண்ட் டிசைன் பணிகளை செய்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பை படக்குழு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

நடிப்பு:
சந்தீப் கிஷன்

தொழில்நுட்ப குழு:
எழுத்து, இயக்கம் – கிருஷ்ண சைதன்யா
தயாரிப்பாளர்கள் – விஜய் சில்லா, ஷஷி தேவிரெட்டி
தயாரிப்பு நிறுவனம் – 70mm Entertainments
இசை – மணி சர்மா
ஒளிப்பதிவு – மதி
படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத்
தயாரிப்பு வடிவமைப்பு – சப்பாணி ராமகிருஷ்ணா, மோனிகா
சவுண்ட் டிசைன் – சச்சின் சுதாகரன், ஹரிஹரன்
PRO – யுவராஜ்

Krishna ChaitanyaPower PetaShashi DevireddySundeep KishanVijay Chilla