சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், ரஜினி படங்களின் அப்டேட்ஸ்..

சுந்தர்.சி இயக்கவுள்ள படங்களின் தகவல்கள் பார்ப்போம்..

நயன்தாரா நடித்து வரும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தினை இயக்கி வருகிறார் சுந்தர்.சி. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சில தினங்களில் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து, விஷால் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். ‘மதகஜராஜா’ வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளது.

விஷால் படத்தின் நாயகிகளாக தமன்னா மற்றும் கயாடு லோஹர் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதற்கான ப்ரோமோ வீடியோ ஒன்றையும் படமாக்கி இருக்கிறார்கள். இந்த வீடியோ பதிவு வெளியீட்டிற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கும் முன்பு, இந்த ப்ரோமோவை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறார்கள்.

விஷால் நடிக்கவிருக்கும் படத்தை ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். இப்படத்தினை அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். விஷால் படத்தை முடித்துவிட்டு ரஜினி நடிக்கவிருக்கும் படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார் சுந்தர்.சி. இதற்கான கதை விவாதம் உள்ளிட்ட பணிகளும் நடைபெற்று வருகிறது.

இப்படமும் குறுகிய காலத்திற்குள் உருவாக உள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. முன்னதாக, ரஜினி-சுந்தர்.சி கூட்டணியில் ‘அருணாச்சலம்’ வெளியாகி வரவேற்பு பெற்றது நினைவுகூரத்தக்கது.

sundar c vishal film to start in november
actor vishaldirector sundar.cRajinikanthநயன்தாராரஜினி