Browsing tag

director sundar.c

புதுமுகங்கள் அறிமுகமாகும் ‘மாயபிம்பம்’ படம்: சுந்தர்.சி போஸ்டர் வெளியீடு..

சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் ‘பொட்டு அம்மன்-2’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து விஷால் நடிக்கவிருக்கும் படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில், செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் சார்பில், கே.ஜே சுரேந்தர் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘மாயபிம்பம்’.‌ புதுமுகங்கள் ஜானகி, ஆகாஷ் பிரபு, ஹரி கிருஷ்ணன், ராஜேஷ், அருண்குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். நடிகர், நடிகைகள் மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் நந்தா, படத்தொகுப்பாளர் வினோத், ஒளிப்பதிவாளர் எட்வின் என தொழில்நுட்ப கலைஞர்களும் முழுக்க முழுக்க புதுமுகங்கள் இப்படத்தில் […]

சுந்தர்.சி-விஷால் இணையும் புதிய படத்தின் அப்டேட்ஸ்..

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கவிருந்த ‘தலைவர்-173’ படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிய சுந்தர்.சி தனது அடுத்த படப்பணிகளில் ஈடுபட்டுள்ளார். அவ்வகையில், சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் ‘மூக்குத்தி அம்மன் 2’. படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இப்படம் திரைக்கு வரவுள்ளது. இதனிடையே, தனது அடுத்த படத்தினை உடனடியாக தொடங்க சுந்தர்.சி முடிவு செய்திருக்கிறார். ஏசிஎஸ் நிறுவனம் மற்றும் விஷால் இணைந்து தயாரிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் […]

மோகன்லால் நடிக்கும் படத்தை சுந்தர்.சி இயக்குகிறாரா?

சூப்பர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர்-173’ படத்திலிருந்து யாரும் எதிர்பாராவிதமாக விலகிவிட்டார் சுந்தர் சி. இந்தப் படம் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகவிருந்தது. கதையில் ஏற்பட்ட சில முரண்பாடுகளே விலகலுக்கு காரணமாக கூறப்படுகிறது. ‘முறைமாமன்’ படத்தில் இயக்குநராக அறிமுகமான சுந்தர்.சி 30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்கிறார். இந்நிலையில், எந்த நடிகரை வைத்துப் படம் இயக்க வேண்டும் என்கிற ஆசையில் பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கிறார். அதாவது, மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலை ஹீரோவாக வைத்து படம் இயக்கும் […]

‘ரஜினி-173’ படத்திலிருந்து சுந்தர்.சி விலகல் ஏன்?: கமல்ஹாசன் விளக்கம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு ’தலைவர் 173’ படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக சுந்தர்.சி உருக்கமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. எதனால் விலகினார் என்பதற்கான காரணம் தெரியாமலேயே இருந்தது. மேலும், இணையத்தில் பலரும் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டார்கள். இதனிடையே டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார் கமல்ஹாசன். ரஜினியின் 173-வது படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் என்பதால், அவரிடம் அந்த படத்தின் நிலை குறித்து பத்திரிகையாளர்கள் […]

ரஜினியின் ‘தலைவர்-173’ படத்தின் அடுத்த இயக்குநர்..

ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட ஒருவாரத்திலேயே சுந்தர்.சி இப்படத்திலிருந்து வெளியேறியுள்ளார். இந்நிலையில், அடுத்ததாக ‘தலைவர் 173’ படத்தை இயக்கும் வாய்ப்பு யாருக்கு? என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. ரஜினி ரசிகர்களை கவர்ந்த ‘பேட்ட’ திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் தலைவரை வைத்து படம் இயக்க, கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் முயற்சித்து வருகிறார். ஆனால், ரஜினிகாந்த் கலகலப்பான ஒரு கமர்ஷியல் படத்தில் நடிக்கவே தற்போது விரும்பியிருக்கிறார். கார்த்திக் சுப்பராஜ் படங்களில் காமெடி […]

ரஜினியின் ‘தலைவர்-173’ படத்திலிருந்து சுந்தர்.சி விலகியதற்கு காரணம் என்ன?

‘தலைவர்-173’ திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்து விட்டது. இது பற்றிய விவரம் காண்போம்.. கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சுந்தர்.சி. இயக்குவதாக இருந்த நிலையில், அதிலிருந்து விலகுவதாக தற்போது இயக்குநர் சுந்தர்.சி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழ்த் திரையுலக ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து சுந்தர்.சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளால், கனத்த இதயத்துடன் ‘தலைவர் 173’ படத்திலிருந்து விலகிக் கொள்வது என்ற […]

தலைவர் 173 படத்திலிருந்து விலகும் கடினமான முடிவை எடுத்துள்ளேன்..சுந்தர்.சி அறிக்கை..!

தலைவர் 173 படத்தில் இருந்து விலகுவதாக சுந்தர்.சி அறிக்கையை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது ஜெயிலர் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருந்த நிலையில் தற்போது இந்த படத்தை இயக்க இருந்த சுந்தர் சி […]

சுந்தர்.சி இயக்கத்தில் மீண்டும் கமல்ஹாசன்?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ‘தலைவர்-173’ படத்தை சுந்தர்.சி இயக்கவுள்ளார். இந்நிகழ்வு கோலிவுட் வட்டாரத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, முதல்முறையாக ரஜினியுடன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இணைந்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது. இச்சூழலில் ‘அருணாச்சலம்’ படத்துக்கு பிறகு மீண்டும் ரஜினியை இயக்கவுள்ளீர்கள். அதேபோல், கமலை மீண்டும் இயக்குவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த சுந்தர்.சி, ‘கமல் சாருடைய ‘சலங்கை ஒலி’ படத்தைபார்த்த பிறகு தான் சினிமாவிற்கு வர விரும்பினேன். அதேபோல், அவருடைய ‘மைக்கேல் மதன காமராஜன்’ […]

‘தலைவர்-173’ படம்: ரஜினிக்காக சுந்தர்.சி செய்த மாற்றம்..

ரஜினி, கமல், சுந்தர்.சி கூட்டணியில் உருவாகும் ‘தலைவர்-173’ படம் குறித்துப் பார்ப்போம்.. சுந்தர்.சி தற்போது நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன்-2’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்துக்கான ஷுட்டிங் கடந்த சில மாதங்களாகவே நடந்து வருகிறது. முன்னதாக, இப்படத்தை முடித்ததும் விஷால் நடிப்பில் ஒரு படத்தை சுந்தர்.சி இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. இவர்களது காம்போவில் உருவான ‘மதகதராஜா’ பல ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகி வெற்றிபெற்ற நிலையில், நான்காவது முறையாக இணைந்தனர். இந்நிலையில், ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பினை எதிர்பாராது பெற்றார். […]

சுந்தர்.சி இயக்கும் ரஜினி படத்தில், கேமியோ ரோலில் கமல் நடிக்கிறாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினி தொடர்ந்து சீரியஸான படங்களிலேயே நடித்து வருகின்றார். எனவே, மீண்டும் லைட்டான ஜாலியான ஒரு படத்தில் ரஜினியை பார்க்கவேண்டும் என பலர் விரும்பினர். அவ்வகையில், ரஜினி மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பான கமர்ஷியல் படத்தில் நடிக்கவுள்ளார். இதனால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. கமல்ஹாசன் தயாரிப்பில் முதல் முறையாக ரஜினி நடிக்கின்றார். இதற்கு முன்பு கமல் தயாரித்த ஒரு சில படங்களில் அவர் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். மகளிர் மட்டும், நள தமயந்தி என […]