Browsing tag

director sundar.c

ரஜினி, கமல், சுந்தர்.சி இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வெளியான ‘கூலி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது. இதனைத் தொடர்ந்து நெல்சன் இயக்கி வரும் ‘ஜெயிலர்-2’ படத்தில் ரஜினி இணைந்துள்ளார். இதனையடுத்து, சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினி தனது 173-வது திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கவுள்ளது. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. குறிப்பாக கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் முதல் படம் என்பதால், பெரிய எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், […]

பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக மீண்டும் நயன்தாரா..

நயன்தாரா தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் ‘பொட்டு அம்மன்-2’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் ‘அகண்டா 2’ படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை முடித்துவிட்டு கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ள படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் பாலகிருஷ்ணா. முழுக்க வரலாற்றுப் பின்னணியில் பெரும் பொருட்செலவில் இப்படம் தயாராகவுள்ளது. இதில், நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது படக்குழு. அவரும் சம்மதம் தெரிவித்திருப்பதால், விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. ‘சிம்ஹா’, ‘ஜெய் சிம்ஹா’ மற்றும் ‘ஸ்ரீ […]

ரஜினி-சுந்தர்.சி கூட்டணியில் உருவாகும் படத்தின் அப்டேட்ஸ்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தை தொடர்ந்து, தற்போது நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர்-2’ படத்தில் நடித்து வருகின்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. அடுத்தாண்டு ஜூன் மாதம் இப்படம் வெளியாகும் என ரஜினி கூறியுள்ளார். இந்நிலையில், ரஜினி ஒரு கலகலப்பான குடும்பப் படத்தில் நடிக்க வேண்டும் எனவும் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. தொடர்ந்து சீரியஸான ஆக்சன் படங்களிலேயே ரஜினி நடித்து வருவதால், அவரது நடிப்பில் ஜாலியான படங்களை ரசிகர்கள் மிஸ் செய்கின்றனர். இதற்கு தீர்வாக இயக்குனரான சுந்தர்.சி […]

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், ரஜினி படங்களின் அப்டேட்ஸ்..

சுந்தர்.சி இயக்கவுள்ள படங்களின் தகவல்கள் பார்ப்போம்.. நயன்தாரா நடித்து வரும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தினை இயக்கி வருகிறார் சுந்தர்.சி. இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சில தினங்களில் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து, விஷால் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். ‘மதகஜராஜா’ வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரியவுள்ளது. விஷால் படத்தின் நாயகிகளாக தமன்னா மற்றும் கயாடு லோஹர் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதற்கான ப்ரோமோ வீடியோ ஒன்றையும் படமாக்கி இருக்கிறார்கள். இந்த வீடியோ பதிவு வெளியீட்டிற்கான பணிகள் […]

சுந்தர்.சி இயக்கத்தில் மீண்டும் ரஜினி நடிக்கிறாரா?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படத்தை சுந்தர்.சி இயக்கவிருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. ‘அருணாச்சலம்’ படத்துக்குப் பின் ரஜினி-சுந்தர்.சி கூட்டணி இணைய இருப்பதாகவும், இதன் தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் தெரியவரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால், ரஜினி-சுந்தர்.சி தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை. தற்போது இமயமலையில் இருந்து திரும்பியுள்ள ரஜினி, அடுத்த படத்தை முடிவு செய்ய கதைகள் கேட்டு வருகிறார். இப்போதுவரை ரஜினி-கமல் இணைந்து நடிக்கவுள்ள படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி […]

ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில், விஷால் நடிக்கும் ‘மகுடம்’ படத்தின் அப்டேட்ஸ்..

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ‘மதகஜராஜா’ வெற்றி பெற்றதை தொடர்ந்து, ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடித்து வருகிறார். இப்படத்துக்கு ‘மகுடம்’ என தலைப்பிட்டுள்ளனர். ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படத்தினை ஆர்.பி.செளத்ரி தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் சண்டைக்காட்சி ஒன்றினை படமாக்கி வருகிறார்கள். இப்படத்தில் துஷாரா விஜயன், அஞ்சலி, தம்பி ராமையா, அர்ஜெய் உள்பட பலர் நடித்து வருகிறார்கள். ஒரே கட்டமாக இதன் படப்பிடிப்பினை முடிக்க படக்குழு […]

மீண்டும் பார்த்திபன்-வடிவேலு இணையும் திரைப்படம்

தமிழ் சினிமாவில் வடிவேலு நகைச்சுவை தனித்த முத்திரை பதித்துள்ளது. மேலும், மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு ஹூரோவாக இருப்பவர் வடிவேலுதான். இச்சூழலில் சுந்தர்.சி. கூட்டணியிலும் மற்றும் விஜய், அர்ஜுன், பிரசாந்த் என கதாநாயகர்களுடன் இணைந்து சிரிப்பு மழை பொழிந்தவர். இதில், பார்த்திபன் உடன் இணைந்து கலக்கிய நகைச்சுவை பேர் பெற்றது. தற்போதும் பேசப்படுகிறது. இந்நிலையில், பார்த்திபன் – வடிவேலு இருவரும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். வடிவேலுவை சந்தித்தது குறித்து பார்த்திபன், ‘நகைச்சுவையில் மட்டுமல்ல, நடிப்பிலும் ஈடில்லாதவர். சந்தித்தோம். இன்று. விரைவில் படம் […]

காக்கிச்சட்டையில் கம்பீரமாய் நயன்தாரா: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

கலெக்டராக நடித்த நயன், தற்போது காக்கிச்சட்டையில் கடமையாற்ற வருகிறார். இது குறித்த தகவல்கள் காண்போம்.. தமிழில் நயன்தாரா கடைசியாக நடித்த படம் இறைவன். பாலிவுட்டில் ஷாருக்கான் உடன் இணைந்து நடித்த ஜவான். பின்னர், ஓடிடியில் தனது உமன் சென்ட்ரிக் படங்களை வெளியிட்டு வருகிறார். அன்னபூரணி மற்றும் டெஸ்ட் படங்கள் ஓடிடியில் வெளியாகியும் ரசிகர்களை கவரவில்லை. இந்நிலையில், நயன்தாரா நடிப்பில் 100 கோடி பட்ஜெட்டில் வேல்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர். சி இயக்கத்தில் […]

எனது பெயரை அவமானமாக பார்க்கிறார்கள்: வடிவேலு ஆதங்கம்..

‘சிரிக்க வைத்தாலும், எனது பெயர் சிலருக்கு அவமானமாகவே தெரிகிறது’ என ஆதங்கமாய் தெரிவித்துள்ளார் வடிவேலு. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ‘நகைச்சுவைப் புயல்’ வடிவேலு நடிப்பில், சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள ‘கேங்கர்ஸ்’ திரைப்படம் வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் இவர்களது கூட்டணியில் 14 ஆண்டுகளுக்கு மாஸ் காட்டியுள்ளது. இதனால், தொடர்ந்து வடிவேலுவும், சுந்தரும் இணைந்து படம் செய்ய வேண்டும் என திரை ஆர்வலர்கள் விரும்புகிறார்கள். இந்நிலையில், இது பற்றி வடிவேலு தெரிவித்துள்ள தகவல் தற்போது டிரெண்ட் […]

சுந்தர்.சி-வடிவேலு கூட்டணியில் ‘கேங்கர்ஸ்’ படம் எப்படி?: வைரல் நிகழ்வு

வடிவேலு வெளிப்படையாக பேசிய நிகழ்வு வைரலாகி வருகிறது. இது பற்றிப் பார்ப்போம்.. சுந்தர்.சி- வடிவேலு கூட்டணியில் உருவான ‘கேங்கர்ஸ்’ படம், இன்று வெளியாகி வரவேற்பு பெற்று வருகிறது. விளையாட்டு வாத்தியார்களாக இருவரும் காமெடியில் அசத்தியுள்ளனர். குறிப்பாக, முதல் பாதியை விட, இரண்டாம் பாதி நகைச்சுவை சரவெடியில் திரையரங்கம் அதிர்கிறது. அவ்வகையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பு திருப்தி என சொல்லலாம். 14 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் சுந்தர்.சி- வடிவேலு காம்போ கலக்கியுள்ளனர். வின்னர், கிரி, ரெண்டு, லண்டன் என இவர்களது […]