மீண்டும் பார்த்திபன்-வடிவேலு இணையும் திரைப்படம்

தமிழ் சினிமாவில் வடிவேலு நகைச்சுவை தனித்த முத்திரை பதித்துள்ளது. மேலும், மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு ஹூரோவாக இருப்பவர் வடிவேலுதான்.

இச்சூழலில் சுந்தர்.சி. கூட்டணியிலும் மற்றும் விஜய், அர்ஜுன், பிரசாந்த் என கதாநாயகர்களுடன் இணைந்து சிரிப்பு மழை பொழிந்தவர். இதில், பார்த்திபன் உடன் இணைந்து கலக்கிய நகைச்சுவை பேர் பெற்றது. தற்போதும் பேசப்படுகிறது.

இந்நிலையில், பார்த்திபன் – வடிவேலு இருவரும் சந்தித்து பேசியிருக்கிறார்கள். வடிவேலுவை சந்தித்தது குறித்து பார்த்திபன்,

‘நகைச்சுவையில் மட்டுமல்ல, நடிப்பிலும் ஈடில்லாதவர். சந்தித்தோம். இன்று. விரைவில் படம் வெளியாகும்!’ என்று தனது எக்ஸ் தளத்தில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் இருவரும் இணைந்து படமொன்றில் நடிக்கவுள்ளார்கள் என்பது உறுதியாகி இருக்கிறது.

பார்த்திபன் – வடிவேலு கூட்டணி காமெடி காட்சிகள் மிகவும் பிரபலம். இப்போதும் காமெடி தொலைக்காட்சிகளில் இருவரும் இணைந்து நடித்த காட்சிகள் தினமும் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால், நீண்ட வருடங்கள் கழித்து இருவரும் நடிக்க இருப்பதால், இந்தக் கூட்டணிக்கு எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.

‘கேங்கர்ஸ்’ படத்துக்குப் பிறகு வடிவேலு நடிப்பில் ‘மாரீசன்’ படம் வெளியாக இருக்கிறது. இதில் ‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு பகத் பாசிலுடன் இணைந்து நடித்துள்ளார் வடிவேலு. இப்படம் ஜூலையில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

actor parthibanactor vadiveludirector sundar.cநடிகர் பார்த்திபன்வைகைப்புயல் வடிவேலு