ரவிமோகனுடன் இணைந்துள்ள கெனிஷா கர்ப்பம் என்று பரவிய தகவலுக்கு, கெனிஷா விளக்கம் அளித்துள்ளார்.
ரவிமோகன்-ஆர்த்தி விவாகரத்து வழக்கு தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து ரவி-பாடகி கெனிஷா இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. இருவரும் லிவின் உறவில் இருப்பதாகவும், கெனிஷா கர்ப்பமாகவிட்டார் எனவும் வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது.
இது குறித்து கெனிஷா விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ‘பெங்களூருவில் பிறந்து வளர்ந்த நான், அதன் பிறகு கனடா சென்றேன். அங்கு இசைக்கல்லூரியில் படித்து முடித்த பிறகு மீண்டும் பெங்களூருவிற்கு வந்துவிட்டேன்.
அதனால், நான் சொல்வதைத் தான் அவர்கள் கேட்பார்கள். என்னுடைய அம்மா பாடகி என்பதால், எனக்கும் அந்த ஆர்வம் வந்து நானும் பாடகியாகி விட்டேன். எனக்கு 17 வயதாக இருக்கும்போது அம்மா இறந்துவிட்டாங்க. அதன் பிறகு அப்பாவும் இறந்துவிட்டார்.
நான் என்னுடைய வாழ்க்கையில் பல கஷ்டங்களை கடந்து தான் வந்திருக்கிறேன். நான் முதலில் காப்பி ஷாப் ஒன்றில் ரூ.500 சம்பளத்திற்கு வேலை பார்த்தேன். என்னை பற்றியும், என்னுடைய அப்பா, அம்மா பற்றியும் பலரும் பலவிதமாக பேசுகிறீர்கள். நீங்கள் உங்களுக்கு வாய் இருக்கிறது என்று பேசுகிறீர்கள். ஆனால், நாளைக்கு அதுவே உங்களுக்கு திரும்ப கிடைக்கும். கர்மா சும்மா விடாது.
மேலும், நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூட பலரும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறீர்கள். எனக்கு சிக்ஸ் தான் இருக்கிறது. நான் ஒன்றும் கர்ப்பம் இல்லை. யார் என்ன பேசினாலும், அது அவர்களுக்கே திரும்ப வரும். கர்மா சும்மா விடாது.
எது உண்மை எது பொய் என்று எல்லோருக்கும் ஒரு நாள் தெரிய வரும். அதுவரையில், எல்லோரும் பிரியாணி சாப்பிட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுங்கள். வரும் 15ஆம் தேதி என்னுடைய ஆல்பம் சாங் வெளியாக இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.