Browsing tag

வாழ்க்கை

விஜயகாந்த் பயோபிக் படத்தில் நடிக்க சண்முகப் பாண்டியன் விருப்பம்..

விஜயகாந்த் மற்றும் இளையராஜா பயோபிக் படங்கள் எப்போது உருவாகும் என்பது பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப் பாண்டியன் நடிப்பில் முதல் படமாக ‘சகாப்தம்’ வெளியானது. பின்னர் ‘மதுரை வீரன்’என்ற படத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து வெளியான ‘படைத்தலைவன்’ படத்தை டிரைக்டர்ஸ் சினிமாஸ் தயாரித்தது இப்படத்தை அன்பு இயக்கியுள்ளார். இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில், பொன்ராம் இயக்கத்தில் வெளியான ‘கொம்புசீவி’ திரைப்படம் […]

‘சிறை’ படம் குறித்து, விக்ரம் பிரபு சுவாரஸ்ய தகவல்..

விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள இப்படத்தில் தயாரிப்பாளர் லலித்தின் மகன் அகசய் சிறைக் கைதியாக நடித்திருக்கிறார். ஒரு போலீஸ்காரருக்கும் கைதிக்குமான உறவைச் சொல்லும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் படம் பற்றி விக்ரம் பிரபு தெரிவிக்கையில், ‘டாணாக்​காரன்’ படத்தை இயக்​கிய தமிழ்​தான் ‘சிறை’ கதையை எழு​தி​யிருக்​கார். ‘ஒரு போலீஸ் கதை இருக்​கு, கேட்கிறீங்​களா? என அவர் கேட்​டதும் ‘டாணாக்​காரன்’ படத்திற்கு பிறகு, போலீஸ் கதைகளா நிறைய […]

சிவகுமார் மகன் என்பதே எனக்கான அடையாளம்: சூர்யா பெருமிதம்..

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் மற்றும் ஓவியர் குருசாமி சந்திரசேகரன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனைக்கான முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. இதனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதற்கு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் கார்த்தி. தற்போது, தந்தை சிவகுமாருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது குறித்து சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஓர் ஓவியராக வாழ்வைத் தொடங்கியவர் என் அப்பா. ஒரு பள்ளியில் […]

தன்னைப் பற்றிய கிண்டல் பதிவுக்கு, சூரி செம பதில், வைரல்..

தமிழ்த்திரையில் தொடக்கத்தில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து, தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளவர் சூரி. விடுதலை, கருடன், மாமன் என அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்தார். தற்போது, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கடல் சார்ந்த பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சூரி தனது சொந்த பந்தங்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். அந்த கொண்டாட்டத்தின் போது எடுத்த வீடியோவை தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவின் கீழ் ஒருவர் ‘திண்ணைல கிடந்தவனுக்கு […]

சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்: இயக்குநர் மாரி செல்வராஜ் நம்பிக்கை..

துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்க ‘பைசன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற 17-ந்தேதி தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகவுள்ளது. இதற்கிடையில், இப்படத்திலிருந்து ‘தீக்கொளுத்தி’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் […]

திரைத்துறையில் 22 ஆண்டுகள் நிறைவு: நயன்தாரா நெகிழ்ச்சி..

தமிழ் சினிமாவில் திருமணத்திற்கு பிறகும் முன்னணி நடிகையாக முத்திரை பதித்து வருபவர் நயன்தாரா என்பது தெரிந்ததே. மலையாள இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் 2003-ம் ஆண்டு வெளியான ‘மனசினக்கரே’ என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானார், நயன்தாரா. சரத்குமார் நடித்த ‘ஐயா’ படம் மூலம் தமிழுக்கு வந்த அவர், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சினிமாவில் 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதைத் தனது வலைதளத்தில் தெரிவித்துள்ள அவர், அதற்காகப் பதிவு ஒன்றையும் வெளியிட்டு […]

இட்லி வாங்க காசில்லையா?: விமர்சனங்களுக்கு தனுஷ் விளக்கம், வைரல்..

தமிழ் சினிமாவில் பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். இவர் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய ஊர்களைத் தொடர்ந்து திருச்சியிலும் விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் தனுஷ், அருண் விஜய் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். மதுரையில் நடைபெற்ற நிகழ்வின்போது, இட்லி வாங்கி சாப்பிடவே கஷ்டப்பட்டதாக தனுஷ் பேசியிருந்தார். இந்த விவகாரத்தை இணையத்தில் பலரும் கிண்டலுக்கு உள்ளாக்கினார்கள். பலரும் வருடத்தைக் குறிப்பிட்டு இவர் […]

நடன இயக்குநரால் அவமானப்பட்டேன்: இஷா கோபிகர் கண்ணீர்..

அரவிந்த் சாமி, இஷா கோபிகர் நடித்த சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ’ என்ற பாடல் பிரபலம் என்பது தெரிந்ததே. ‘காதல் கவிதை’ படத்தில் பிரசாந்த் ஜோடியாகவும் நடித்திருந்தார். இந்நிலையில், தென்னிந்திய நடன இயக்குநர் ஒருவர் தன்னை அவமானப்படுத்தியதாக இஷா கோபிகர் தற்போது பகிர்ந்துள்ளார். இது பற்றிப் பார்ப்போம்.. இஷா கோபிகர் வெளிப்படையாக பேசுகையில், ‘தென்னிந்திய படங்களில் ஒன்றில், நான் என் சினிமா வாழ்க்கையை தொடங்கியிருந்தேன். இது நான் பாலிவுட்டில் நுழைவதற்கு முன்பு நடந்த சம்பவம். நான் […]

திருமணத்தின் மீது எனக்கு ஆசையில்லை: நடிகை சதா கொள்கை

ஒவ்வொருவரும் சதா சதா நினைப்பதெல்லாம், சம்பாத்தியம், திருமணம், வாழ்க்கை பற்றியது தானே. இதில், நடிகை சதா பற்றிய கூற்று பார்ப்போம்.. தமிழ் சினிமாவில், ‘ஜெயம்’ படத்தின் மூலமாக வசீகரித்தவர் நடிகை சதா. கோலிவுட்டை கடந்து மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் உலா வந்தார். தமிழில் வெளியான ‘உன்னாலே உன்னாலே’ படத்துக்கு பிறகு, அவருக்கான வாய்ப்புகள் குறைந்தது. பின்னர் மஜீத் இயக்கிய ‘டார்ச்லைட்’ படத்தில் விலைமாதுவாக நடித்து ஆச்சரியப்படுத்தினார். தற்போது சதா, போட்டோஷுட் எடுத்து வெளியிட்டு ரீ என்ரி […]

கர்மா சும்மா விடாது, பிரியாணி சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்கள்: பாடகி கெனிஷா விளக்கம்

ரவிமோகனுடன் இணைந்துள்ள கெனிஷா கர்ப்பம் என்று பரவிய தகவலுக்கு, கெனிஷா விளக்கம் அளித்துள்ளார். ரவிமோகன்-ஆர்த்தி விவாகரத்து வழக்கு தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து ரவி-பாடகி கெனிஷா இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. இருவரும் லிவின் உறவில் இருப்பதாகவும், கெனிஷா கர்ப்பமாகவிட்டார் எனவும் வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது. இது குறித்து கெனிஷா விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ‘பெங்களூருவில் பிறந்து வளர்ந்த நான், அதன் பிறகு கனடா சென்றேன். அங்கு இசைக்கல்லூரியில் படித்து முடித்த பிறகு […]