Browsing tag

வாழ்க்கை

தனது பெற்றோர் கமல்-சரிகா விவாகரத்து பற்றி ஸ்ருதிஹாசன் வைரலாகும் பேச்சு

தனது முதிர்ந்த வாழ்வியல் அனுபவத்தை ஸருதிஹாசன் மனம் திறந்து பகிர்ந்துள்ளார். இது பற்றிப் பார்ப்போம்.. ஸ்ருதி ஹாசன், தனது பெற்றோரான கமல்ஹாசன்-சரிகா ஆகியோரின் விவாகரத்து குறித்து முன்பு தெரிவித்த தகவல்கள் தற்போது மீண்டும் வலைதளங்களில் விவாதத்திற்கு வந்துள்ளது. தந்தை-தாயின் பிரிவு தனக்கு வருத்தத்தை விட, வாழ்க்கையின் ஒரு மதிப்புமிக்க பாடத்தைக் கற்றுக் கொடுத்தது, குறிப்பாக ஒரு பெண் பொருளாதார ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் சுதந்திரமாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியது என கூறியுள்ளார். ‘நான் சின்ன வயதில் […]

அடுத்த மாதம் ரிலீஸாகும் ‘குயிலி’ படத்தின் கதை என்ன தெரியுமா?

‘குயிலி’ படத்தின் கதை பற்றிப் பார்ப்போம்.. அறிமுக இயக்குனர் ப.முருகசாமி இயக்கத்தில் லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம், ‘குயிலி’. இப்படத்தில் ரவி சா, தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஜூ ஸ்மித் இசையமைக்க, அருண்குமார் தயாரித்துள்ளார். ‘குயிலி’ படம் பற்றி இயக்குனர் ப.முருகசாமி தெரிவிக்கையில், ‘இயக்குனர் பாலாஜி சக்திவேலிடம் பணியாற்றிவிட்டு இந்தப் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறேன். மதுவுக்கு […]

பழைய நினைவுகளை அழித்து, புதிய வாழ்க்கையில் நுழைகிறார் சமந்தா

‘பழையன கழிதலும், புதியன புகுதலும் நன்று’ என்பதுபோல நடிகை சமந்தா 2-வது மணவிழா புகுகிறாரா? என காண்போம்.. நாக சைதன்யா-சம்ந்தா இருவரும் காதலித்து 2017-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். பின்னர், இருவரும் 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். நாக சைதன்யாவிடமிருந்து பிரிந்து 4 ஆண்டுகள் ஆகின்றன. இந்தக் காலகட்டத்தில், அவர் தனது காதல் சின்னமாக YMC டாட்டூவை வைத்திருந்தார். ஆனால், தற்போது டாட்டூவை நீக்கியதன் மூலம் அவர் பழைய நினைவுகளை மறந்துவிட்டு வாழ்க்கையில் முன்னேறிச் செல்கிறார் […]

நடிகர் ரவிமோகனின் புதிய தொடக்கம்

ரவி மோகன் தற்போது ‘கராத்தே பாபு’ மற்றும் ‘பராசக்தி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் நடித்துள்ள ‘ஜீனி’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து ‘தனி ஒருவன்-2′ படமும் நடிக்கவுள்ளார். தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்திருக்கும் ரவி மோகன் விவாகரத்து கோரியுள்ளார். தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சினைகளை சந்தித்து வரும் போதிலும், புதிய தொடக்கங்களை மேற்கொண்டு வருகிறார். அவ்வகையில், அவர் […]

முதல் மணம் விவாகரத்து, 2-வது மணமோ சோகம், 3-வதாக காதல்: ஒரு நடிகையின் வாழ்க்கை..

‘எங்கே வாழ்க்கை தொடங்கும், அது எங்கே எவ்விதம் முடியும்’ என்ற கண்ணதாசன் வரிகள் ஒவ்வொருவருக்கும் பொருந்தும்தானே. அவ்வகையில், பூவே உனக்காக பட நடிகை அஞ்சு அரவிந்த் பற்றி பார்போம்.. தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்து கூறியுள்ளார் அஞ்சு. அவர் கூறியதாவது, ‘முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த பின்னர், எல்லாம் சரியாகிவிடும் என நம்பி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன். ஆனால், அந்தத் திருமணமும் சோகத்தில் முடிந்தது. வாழ்க்கை எதிர்பாராத பல திருப்பங்களை கொடுத்தது. திருமணம் […]

உழைப்புக்கு மரியாதை கொடுங்கள்: நடிகர் சூரி வேண்டுகோள்..

சூரி விடுத்துள்ள வேண்டுகோள் பற்றிக் காண்போம்.. நடிகர் சூரி கதையெழுதி நடித்து வெளியான ‘மாமன்’ திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றுள்ளது. படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா, பாபா பாஸ்கர், ராஜ்கிரண் என பலர் நடித்திருந்தார்கள். சுமாரான வரவேற்பை பெற்றாலும், வசூல் அளவில் திருப்தியை தந்துள்ளது. இந்நிலையில், சூரி தனது எக்ஸ் பக்கத்தில், ‘ஒரு திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல.. அது பலரின் கனவுகளும், உயிரோட்டமான உழைப்புகளும் சேர்ந்த ஒன்று. இந்த உரை என் திரைப்படத்துக்காக மட்டும் […]

திருமணத்துக்குப் பிறகு தன்ஷிகா நடிப்பாரா?: விஷால் விளக்கம்..

‘கடவுள் எப்போதுமே சிறந்ததை கடைசியில் தான் தருவார்’ என தெரிவித்துள்ளார் விஷால். இது குறித்த தகவல்கள் காண்போம்.. ‘யோகிடா’ திரைப்பட விழாவில் கலந்துகொண்ட விஷால் தெரிவிக்கையில், ‘இங்கு தன்ஷிகாவின் தந்தை இருக்கிறார். அவரது அனுமதியோடு சொல்கிறேன். நான் தன்ஷிகாவை காதலிக்கிறேன். அவரைத்தான் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறேன். அவரை, நான் நன்றாகவே பார்த்துக்கொள்வேன். வெளியில் சொல்ல வேண்டாமென்றுதான் நினைத்தோம். ஆனால், வேறு வழியில்லாமல் இப்போது சொல்லிவிட்டேன். ஆகஸ்ட் 29-ந்தேதி எனது பிறந்த நாள். அன்றைய நாளில் நாங்கள் இரண்டு பேரும் […]

ஆர்த்தியும் ரவிமோகனும் இணைந்து வாழ வேண்டும்: சுஜாதா விளக்கம்

ஆர்த்தியின் தாயார் சுஜாதா வெளியிட்டுள்ள அறிக்கை காண்போம்.. நடிகர் ரவிமோகன் சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிக்கையில், கடந்த சில வருடங்களாகவே நான் என்ன மாதிரியான நெருக்கடிகளை சந்தித்தேன் என்பது என்னுடைய சினிமா நண்பர்களுக்கு தெரியும். ஒரு வருடத்துக்கு முன்பு எனது முன்னாள் மனைவியின் தாய் பல கோடி ரூபாய் கடன் வாங்கினார். அந்தக் கடனுக்கு நான் உத்தரவாதம் அளித்து கையெழுத்து போடும் கட்டாயத்துக்கு அவர்களால் தள்ளப்பட்டேன். மேலும், பத்து நாட்களுக்கு முன்புகூட ஆர்த்தியின் தாயார் என்னை தொடர்புகொண்டு, நான் […]

என் அம்மாவை மீறி, நான் செய்த ஒரே விஷயம்: நடிகை தேவயானி ஓபன் டாக்..

இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து, பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துகொண்டார் தேவயானி என்பது தெரிந்ததே. தற்போது அந்நிகழ்வுகள் குறித்து மனம் திறந்து அவர் தெரிவிக்கையில், ‘நான் பிறந்தது மும்பையில் தான். அங்கு தான் படித்தேன். எனக்கு நடிப்பு, நடனத்தின் மீது ஈடுபாடு இருந்ததால் நடிகையாக வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அப்போது ஹிந்தி படம் ஒன்றில் அறிமுகமானேன். இப்போது வரைக்கும் அந்த படம் வெளியாகவே இல்லை. அதுதான் நான் நடித்த முதல் படம். அதன் பிறகு, மலையாளத்தில் […]

‘ரிஸ்க்’ எடுத்தால் முன்னேறலாம்: நடிகை சமந்தா பேச்சு, வைரல்..

பாலிவுட்டில் நடிகை சமந்தா கடைசியாக வருண் தவானோடு ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ என்கிற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இந்த ஆக்‌ஷன்-த்ரில்லர் சீரிஸ் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது. இந்நிலையில், வாழ்க்கை-தன்னம்பிக்கை-ரிஸ்க்-மாற றம் என்றெல்லாம் தெரிவித்திருப்பது தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்துப் பார்ப்போம். ‘ரிஸ்க் எடுக்காமல் எந்த ஒரு மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. வாழ்க்கையிலும், தொழிலிலும் முன்னேற வேண்டும் என்றால், கம்ஃபோர்ட் ஜோன்ல இருக்கக் கூடாது. புதிதாக எதையாவது முயற்சிக்க வேண்டும். பயத்தை விட்டு விட்டு தைரியமாக சவால்களை […]