தனது பெற்றோர் கமல்-சரிகா விவாகரத்து பற்றி ஸ்ருதிஹாசன் வைரலாகும் பேச்சு

தனது முதிர்ந்த வாழ்வியல் அனுபவத்தை ஸருதிஹாசன் மனம் திறந்து பகிர்ந்துள்ளார். இது பற்றிப் பார்ப்போம்..

ஸ்ருதி ஹாசன், தனது பெற்றோரான கமல்ஹாசன்-சரிகா ஆகியோரின் விவாகரத்து குறித்து முன்பு தெரிவித்த தகவல்கள் தற்போது மீண்டும் வலைதளங்களில் விவாதத்திற்கு வந்துள்ளது.

தந்தை-தாயின் பிரிவு தனக்கு வருத்தத்தை விட, வாழ்க்கையின் ஒரு மதிப்புமிக்க பாடத்தைக் கற்றுக் கொடுத்தது, குறிப்பாக ஒரு பெண் பொருளாதார ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் சுதந்திரமாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியது என கூறியுள்ளார்.

‘நான் சின்ன வயதில் இருக்கும்போது அவர்கள் பிரிந்தனர். உண்மையைச் சொல்லப் போனால், அதற்காக எனக்கு வருத்தமாக இல்லை. மாறாக, அவர்கள் பிரிவதற்கு நான் மகிழ்ச்சியடைந்தேன்.

ஏனென்றால், இருவர் ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்க முடியாதபோது, கட்டாயப்படுத்தி ஒரே கூரையின் கீழ் வாழ்வதில் எந்த அர்த்தமும் இல்லை. அவர்கள் ஒன்றாக வருந்துவதை விட, தனித்தனியாக தங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பது நல்லது என்று நான் நினைத்தேன்,” என்று தனது முதிர்ச்சியான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.

இந்த சம்பவம் ஸ்ருதியின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மிகப்பெரிய தாக்கம், அது அவருக்குக் கற்றுக் கொடுத்த சுதந்திரப் பாடம். என் அம்மா சரிகா விவாகரத்திற்குப் பிறகு தன்னம்பிக்கையுடன், தைரியமாக நின்று தனது வாழ்க்கையை மறுவடிவமைத்த விதம் எனக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருந்தது.

அந்த சம்பவம் ஒரு பெண் உணர்ச்சி ரீதியாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் தன்னிறைவு பெற்றிருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை எனக்கு உணர்த்தியது. அது என் வாழ்க்கையின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக மாறியது. தந்தை-தாயின் பிரிவு அவரவர் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக எடுத்த முடிவு, அதை மதிக்கிறேன்’ என கூறியுள்ளார். இது தற்போது இணையவெளியில் வைரலாகி வருகிறது.

ஸருதி தற்போதும் தனது தந்தை மற்றும் தாயுடன் சிறந்த, தனிப்பட்ட உறவைக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொழில் ரீதியாக, பிரசாந்த் நீல் இயக்கிய ‘சலார்’ படத்தில் பிரபாஸுடன் நடித்து, ரசிகர்களை கவர்ந்துள்ளார். லோகேஷ் இயக்கியுள்ள ‘கூலி’ படத்தில் ரஜினிகாந்த் மகளாக நடித்து முடித்துள்ளார்.

actor kamal haasanactress shruthi haasanlifeரஜினிகாந்த்வாழ்க்கை