அன்று ‘முகமூடி’ படத்தில் அறிமுகமாகி கவனிக்கப்படாத பூஜா ஹெக்டே, தற்போது முன்னணி நடிகையாகி உள்ளார். கவர்ச்சியில் கஞ்சத்தனம் இல்லாத தாராளமயமான அவரது அப்டேட்ஸ் பார்ப்போம்..
தளபதியின் 69-வது படமான ‘ஜனநாயகன்’ படத்தில் பூஜா ஹெக்டே ஜோடியாகியுள்ளார். ஹிந்தியில் ஷாகித் கபூர் நடிக்கும் ‘தேவா’ படத்திலும் ஜோடியாகி உள்ளார். இந்த படம் வரும் 31-ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் ஷாகித் கபூருடன், பூஜா ஹெக்டே செம ஹாட்டாக நெருங்கிய காட்சியை சென்சார் போர்டு “கட்” செய்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படத்திலும் பூஜா இணைந்துள்ளார்.
இந்நிலையில், 31-ந் தேதி வெளியாக இருக்கும் பாலிவுட் படமான ‘தேவா’ படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியது. மேலும் படத்தில் ஷாகித் கபூருடன், பூஜா ஹெக்டே 6 வினாடிகள் லிப்-லாக் காட்சியை நீக்கியும், இன்னும் சில காட்சிகளையும் நீக்கியுள்ளது.
இப்படத்தின் ரன்னிங் டைம், 2 மணி, 36 நிமிடங்கள் மற்றும் 59 வினாடிகளாக உள்ளது. ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கி இருக்கும் இப்படத்தில், ஷாகித் கபூர் போலீஸ் அதிகாரி தேவ் ஆம்ப்ரேவாக நடித்துள்ளார். பூஜா ஹெட்ஜைப் தியாவாக என்ற ரோலில் நடித்துள்ளார்.
இந்த ‘தேவா’ படம் பாலிவுட்டில் தனக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என பூஜா ஹெக்டே பெரிதும் நம்பியுள்ளார். ஏனெனில், படத்தில் கவர்ச்சி வள்ளலாய் மாறியுள்ளார்.
அப்டின்னா, ‘ஜனநாயகம்’ படத்தில் எப்படி வருகிறீர்கள்? என பூஜாவிடம் விஜய் ரசிகர்கள் கேட்டு வருவதற்கு, சைலன்ட் ஒன்றையே பதிலாய் தருகிறார்.