ராவணனாக ராக்கிங் ஸ்டார் யஷ்… வெளியானது ராமாயணம் படத்தின் பிரம்மாண்ட போஸ்டர்!

இந்திய சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் நடிக்கும் ராக்கிங் ஸ்டார் யஷின் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

தங்கக் கிரீடம், முத்து மாலைகள் மற்றும் பிரம்மாண்டமான தங்க ஆபரணங்களுடன் ராஜ கம்பீரமாக காட்சியளிக்கும் யஷ், தனது தீவிரமான பார்வையால் போஸ்டரில் கவனம் ஈர்க்கிறார்.

டிரெய்லர் வெளியானது முதலே யஷின் ராவணன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த போஸ்டர் அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

வலிமை, அறிவு, அதிகாரம் மற்றும் கம்பீரம் ஆகிய பல்வேறு பரிமாணங்களை பிரதிபலிக்கும் வகையில் யஷின் ராவணன் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. படத்தின் பிரம்மாண்டத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த போஸ்டர் அமைந்துள்ளது.

‘ராமாயணம்’ திரைப்படத்தில் ரன்பீர் கபூர் ஸ்ரீ ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யஷ் ராவணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதல் பாகம் தீபாவளி 2026-லும், இரண்டாம் பாகம் தீபாவளி 2027-லும் வெளியாக உள்ளது.

RamayanaRocking Star Yash’s First Official Poster From Ramayana Is OutYash