ரவிமோகன்-ஆர்த்தி விவகாரம் தெரிந்ததே. இந்நிலையில், ரவிமோகன் இப்போது இலங்கை சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் வலைதளங்களில் வைரலானது.
ஆனால், இலங்கைக்கு அவர் மட்டும் தனியாக செல்லவில்லை. அவருடன் இணைந்து கெனிஷாவும் சென்றுள்ளார். இருவரும் இலங்கை சென்ற நிலையில், இலங்கை வெளியுறவுத் துறை விஜித் ஹெராத்தை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு இலங்கையில் இசைக் கச்சேரி நடத்துவது தொடர்பாக நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கெனிஷா ஏராளமான ஆல்பம் பாடல்களில் பாடியிருக்கிறார்.
மேலும், பல இசை நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று பாடியிருக்கிறார். இந்நிலையில் இப்போது ரவிமோகன் ஆலோசனையின் பெயரில் இருவரும் இலங்கை சென்று இசைக் கச்சேரி நடத்துவது குறித்து பேசியிருக்கின்றனர். விரைவில் இலங்கையில் இசை நிகழ்ச்சி நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ரவிமோகன் நடிப்பில் கராத்தே பாபு, பராசக்தி, ஜெனீ, தனி ஒருவன்-2 ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில், சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் ரவிமோகன் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.