‘டெக்​சாஸ் டைகர்’ படப்​பிடிப்பு நிறைவு

விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘டெக்சாஸ் டைகர்’ திரைப்படத்தின் ஆடியோ உரிமையை உலகின் முன்னணி இசை நிறுவனங்களில் ஒன்றான சோனி மியூசிக் கைப்பற்றியுள்ளது. படத்தின் வெளியீட்டு பயணத்தில் இது முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

சர்வதேச அளவில் இசைத்துறையில் முன்னணி இடத்தை வகிக்கும் சோனி மியூசிக், இளம் படைப்பாளர்களின் முயற்சியான ‘டெக்சாஸ் டைகர்’ படத்துடன் இணைந்திருப்பது திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் மூலம் படத்தின் இசை, உள்ளடக்கம் மற்றும் வணிக சாத்தியங்கள் மீது கூடுதல் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சோனி மியூசிக்கின் உலகளாவிய விநியோகம் மற்றும் வலுவான விளம்பர ஆதரவால், படம் அதிகமான ரசிகர்களை சென்றடைவதுடன், திரையரங்கு வெளியீட்டிற்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இயக்குநர் செல்வகுமார் திருமாறன் கூறுகையில், “படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. அதைவிட மகிழ்ச்சியான விஷயம், ‘டெக்சாஸ் டைகர்’ படத்துடன் சோனி மியூசிக் இணைந்திருப்பது. உலக இசை வரலாற்றில் பல மறக்க முடியாத இசைத் தொகுப்புகளின் இல்லமாக விளங்கும் சோனி மியூசிக் போன்ற மதிப்புமிக்க நிறுவனத்துடன் இணைவது எங்களுக்கு பெருமை.

இந்த கூட்டணி, எங்கள் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறோம். வரும் மாதங்களில் ரசிகர்கள் ‘டெக்சாஸ் டைகர்’ இசையையும் அதன் உலகத்தையும் ரசிப்பதை காண ஆவலாக இருக்கிறோம்” என்றார்.

பொழுதுபோக்கு, உணர்வுபூர்வமான தருணங்கள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் அனைத்து வயதினரையும் கவரும் வகையில் ‘டெக்சாஸ் டைகர்’ உருவாகி வருகிறது. படத்தின் இசை வெளியீடு, ரிலீஸ் தேதி மற்றும் பிற முக்கிய அறிவிப்புகள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாக உள்ளன.

தொழில்நுட்பக் குழு:

தயாரிப்பு நிறுவனம்: யுகே ஸ்குவாட்
எழுத்து, இயக்கம்: செல்வகுமார் திருமாறன் (பேமிலி படம் புகழ்)
நடிகர்கள்: ஹிருது ஹரூன், சம்யுக்தா விஸ்வநாதன், ரோகிணி மொல்லேட்டி

‘டெக்சாஸ் டைகர்’ திரைப்படம் தற்போது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள முக்கியமான புதிய படைப்பாக உருவெடுத்து வருகிறது.

Hridhu HaroonRohini MolletiSamyuktha ViswanathanTexas TigerTexas Tiger shooting wrapped up