வாட்ஸ்அப்பில் ஆள்மாறாட்டம்: நடிகை ரகுல் பிரீத் சிங் எச்சரிக்கை..

பிரபலங்களின் பெயரில் சிலர் போலி சமூக ஊடக கணக்குகளை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டு வருவது தொடர்கிறது. இது குறித்து புகார்களும் அளித்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

சமீபத்தில், நடிகை, ருக்மணி வசந்த், அதிதிராவ் மற்றும் ஸ்ரேயா சரண் ஆகியோரின் பெயரில் போலி கணக்குகளை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கு நடிகைகள் அது தங்களுடைய நம்பர் இல்லை, எனவும் அதை நம்ப வேண்டாம் எனவும் தெளிவுபடுத்தி இருந்தனர்.

இந்நிலையில் ரகுல் பிரீத் சிங் தனது எக்ஸ் பக்கத்தில், ‘தனது வாட்ஸ்அப் எண் என்று கூறி ஒரு போலி எண்ணைப் பயன்படுத்தி அரட்டை அடிப்பதாக பதிவிட்டுள்ளார்.

அதில், ‘வணக்கம் நண்பர்களே… யாரோ ஒருவர் என்னைப் போல வாட்ஸ்அப்பில் ஆள்மாறாட்டம் செய்வது என் கவனத்திற்கு வந்துள்ளது. இது என்னுடைய எண் அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். யாரும் உரையாடல்களில் ஈடுபட வேண்டாம். தயவுசெய்து பிளாக் செய்யுங்கள்’ என தெரிவித்துள்ளார்.

rakul preet singh alerts fans about speaking on her behalf
actress rakul preet singhcompliantinvestigationநடிகை அதிதிராவ்ருக்மணி வசந்த்