ராவடி படத்தின் முதல் பாடல் வெளியீடு!

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான பேசில் ஜோசப் மற்றும் ‘சிறை’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் எல்.கே. அக்ஷய் குமார் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ராவடி’ (Raawadi). இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘அட்ரா பரமா..’ எனும் முதல் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பேசில் ஜோசப், எல்.கே. அக்ஷய் குமார், ஜான் விஜய், ஜாபர் சாதிக், நோபல் கே. ஜேம்ஸ், ஷாரிக் ஹாசன், அருணாச்சலேஸ்வரன் பி.ஏ., சத்யன், ஐஸ்வர்யா சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். படத்தொகுப்புப் பணிகளைப் பரத் விக்ரமன் மேற்கொண்டுள்ளார். பி.எஸ். ஹரிஹரன் தயாரிப்பு வடிவமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார். கமர்ஷியல் என்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.எஸ். லலித்குமார் தயாரித்துள்ளார். எல்.கே. விஷ்ணுகுமார் இணைத் தயாரிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ளார்.

- Advertisement -

படத்தின் ஆடை வடிவமைப்பை பிரியா ரவி கவனித்துள்ளார். எம். ஷெரிப் நடன அமைப்பையும், டான் அசோக் சண்டைப் பயிற்சியையும் மேற்கொண்டுள்ளனர். ஒலி வடிவமைப்புப் பணிகளை எஸ். அழகியகூத்தன் மற்றும் சுரேன் ஜி ஆகியோர் கவனித்துள்ளனர். ஒலி கலவைப் பணிகளை சுரேன் ஜி மேற்கொண்டுள்ளார். ஆகாஷ் பாலாஜி படப்பிடிப்புத் தளப் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றியுள்ளார். யுவராஜ் மக்கள் தொடர்புப் பணிகளையும், ஆர்.எஸ். வெங்கட் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனித்துள்ளனர். மணிகண்டன் எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசராகவும், அருண் கே. கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பணியாற்றியுள்ளனர்.

வரும் டிசம்பர் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘அட்ரா பரமா..’ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ‘பொடி பொடியா அடிச்சது பொடியன் இல்ல… பாத்துக்க பாத்துக்க…’ எனத் தொடங்கும் இப்பாடலை உதய் எழுதியுள்ளார். அறிவு பாடியுள்ள இப்பாடலுக்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். இளமைத் துள்ளல் நிறைந்த இசையில் உருவாகியுள்ள இப்பாடல் இளம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஏற்கனவே இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘படிடா பரமா’ என்ற வசனம் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அந்த வரவேற்பைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள ‘அட்ரா பரமா’ பாடலும் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

basil josephJaffar SadiqJohn VijayLK Akshay KumarNoble K JamesRaawadiRaawadi Movie’s First Single ReleasedShariq Hassan