முதல் மணம் விவாகரத்து, 2-வது மணமோ சோகம், 3-வதாக காதல்: ஒரு நடிகையின் வாழ்க்கை..

‘எங்கே வாழ்க்கை தொடங்கும், அது எங்கே எவ்விதம் முடியும்’ என்ற கண்ணதாசன் வரிகள் ஒவ்வொருவருக்கும் பொருந்தும்தானே. அவ்வகையில், பூவே உனக்காக பட நடிகை அஞ்சு அரவிந்த் பற்றி பார்போம்..

தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்து கூறியுள்ளார் அஞ்சு. அவர் கூறியதாவது, ‘முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த பின்னர், எல்லாம் சரியாகிவிடும் என நம்பி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன். ஆனால், அந்தத் திருமணமும் சோகத்தில் முடிந்தது.

வாழ்க்கை எதிர்பாராத பல திருப்பங்களை கொடுத்தது. திருமணம் முடிந்து சில நாட்களுக்குப் பின்னர் இரண்டாவது கணவரும் இறந்துவிட்டார். இதனால், கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானேன்.

அதன் பிறகு, வாழ்க்கை சில ஆச்சரியங்களை எனக்கு கொடுத்தது. நீண்ட நாட்களுக்குப் பின்னர் எனது பள்ளிப் பருவத்து நண்பரான சஞ்சய் அம்பல பரம்பத் என்பவரை எதிர்பாராது சந்திந்தேன். எங்கள் நட்பு பின்னாளில் காதலாக மாற, ஐந்து ஆண்டுகளாக பெங்களூரில் வசித்து வருகிறேன்.

பள்ளியில் படிக்கும் பொழுது நடன வகுப்புகளில் இருவரும் சந்தித்திக் கொண்டோம். மொபைல் போன் வசதி இல்லாததால், இருவருக்கும் இடையே இருந்த நட்பை தொடர முடியாமல் போனது.

நீண்ட காலத்திற்கு பிறகு, நாங்கள் சந்தித்துக் கொண்டுள்ளோம். தற்போது அவர் வாழ்க்கைத் துணையாக மட்டுமல்லாமல், எனக்கு மிகப்பெரிய ஆதரவாகவும் இருந்து வருகிறார்.

நடன ஆசிரியராக விரும்பிய எனக்கு முழு ஆதரவை கொடுத்துள்ளார். இருவரும் இணைந்து பெங்களூரில் ‘அஞ்சு அரவிந்த் அகாடமி ஆஃப் டான்ஸ்’ என்கிற நடனப் பள்ளியையும் நடத்தி வருகிறோம்.

ஐடியில் பணியாற்றி வந்த சஞ்சய் இப்போது அதிலிருந்து ஓய்வு பெற்று சமூக சேவை மற்றும் எழுத்தில் கவனம் செலுத்தி வருகிறார். என்னைப் போலவே அவரும் ஒரு நடன கலைஞர்.
எங்கள் மகள் அன்விகா தற்போது இடைநிலைப் பள்ளியில் பயின்று வருகிறாள் என்றார் புன்னகையுடன்.!

சுழலும் பூமியில் சாமான்யரென்ன சாதனையாளரென்ன, விழுவது இயல்பு; எழுவதுதானே வாழ்வு.!

poove unakkaga movie actress anju aravind life story
actress anju aravindlovemarriageதிருமணம்வாழ்க்கை